ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 10 பைசா செலவில்லாம 1 மணி நேரம் இப்படி பண்ணுங்க 100% காடு மாதிரி உங்க முடி வளர்ந்துகிட்டே போகும்!

long-hair-pack
- Advertisement -

தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கு உதவும் அற்புதம் வாய்ந்த பொருட்கள், நம்மை சுற்றி நம்முடைய வீட்டிலேயே இருக்கின்றது. அதை விட்டுவிட்டு பல ஆயிரம் செலவு செய்து கண்ட கண்ட எண்ணெய்களையும், கண்ட கண்ட ஹேர் பாக்குகளையும் போட்டு தலை முடியின் வளர்ச்சியை மேலும் பாதிப்படைய செய்து விடுகிறோம். பெரும்பாலான டாக்டர்கள் பரிந்துரைக்கும் இந்த ஒரு விஷயம், அனைவரும் அறிந்தது தான் என்றாலும் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதில் இருக்கும் சிக்கல்களை தெளிவாக இந்த பதிவின் மூலம் பார்ப்போம் வாருங்கள்.

தலைமுடி கொட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக இருப்பது தேவையான ஊட்டச்சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளாதது ஆகும். அடுத்ததாக நம்மை சுற்றி இருக்கும் மாசு மற்றும் செயற்கை பொருட்களும் இன்றியமையாத காரணமாக இருக்கிறது. இதிலிருந்து எளிதாக விடுபடுவதற்கு அதிக அளவு நாம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண தேங்காய் எண்ணெயை மட்டும் தினமும் தலைக்கு தடவுங்கள்.

- Advertisement -

வாரம் இருமுறையாவது தலையை அலசுங்கள். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து வந்தாலே தலை முடி நல்ல வளர்ச்சி காணும். மேலும் தலை முடியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிலர் வாரம் ஒரு முறை தான் தலைக்கு குளிப்பார்கள். ஆனால் அதற்குள் அவர்களுடைய தலையில் நிறையவே தூசுகள் சேர்ந்திருக்கும், இப்படி செய்யக் கூடாது. ரெண்டு நாளுக்கு ஒரு முறையாவது தலையை சுத்தம் செய்து விட வேண்டும்.

முதல் நாள் இரவு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சாதம் வடித்த கஞ்சியில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் வெந்தயம் கஞ்சியுடன் சேர்ந்து நன்கு முழுமையாக ஊறி சாப்ட்டாக மாறி இருக்கும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சில பொருட்களை சேர்த்து எளிதான ஹேர் பேக் ஒன்று செய்யப் போகிறோம். வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது எனவே இதை தலைக்கு தேய்த்தால் சளி பிடிக்குமோ? என்று பயப்பட வேண்டாம்.

- Advertisement -

இதனுடன் நாம் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான கற்றாழை ஜெல்லை சேர்க்க போகிறோம். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இலை ரெண்டு, செம்பருத்தி பூ ஒன்று, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து ரெண்டு மிளகை தட்டி சேருங்கள். மிளகு இதில் இருக்கும் உஷ்ண தன்மையை ஈர்த்துக் கொள்ளும். இதனால் சளி பிடிக்காது. தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த விழுதை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

பிறகு தலையை நன்கு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இதை அப்படியே ஊற விட்டு விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊற விட வேண்டாம். பிறகு தலையை மைல்டான ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். இது போல வாரம் ஒரு முறை அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் செய்து கொண்டால் போதும், இரண்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் உங்களுடைய தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து அபரிமிதமான வளர்ச்சியை காணலாம்.

- Advertisement -