முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்ற உதவும் இந்த பவுடரை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து கொள்ளலாம்

face
- Advertisement -

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைபாடினால் தேவையற்ற ரோமங்கள் முகத்தில் வளர ஆரம்பிக்கின்றன. இதற்கு காரணம் பெண்கள் பூப்பெய்த பிறகு மாதவிடாய் காரணமாக அவர்களின் உடம்பில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதாகும். இவ்வாறு முகத்தில் ரோமங்கள் வந்தவுடன் அதனை பார்த்து பதட்டம் அடையும் சிலர் உடனே ப்ளக்கிங், வேக்சிங், ட்ரிம்மிங் போன்ற செயல்களை செய்து விடுவார்கள். இதனால் அந்த இடத்தில் முடி வளர்ச்சி அதிகமாகுமே தவிர நிரந்தரத் தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறான தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு ஒரு விசேஷ பவுடரை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

face

பெண்கள் பலருக்கு இவ்வாறான தேவையற்ற ரோம பிரச்சனை அதிகப்படியாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி இருக்க டீன்-ஏஜ் வரும் பொழுது அவர்களின் அழகில் அதிகம் ஈடுபாடு காட்டுகிறார்கள். இவ்வாறான நேரத்தில் முகத்தில் உருவாகும் இந்த தேவையற்ற முடிகளினால் வேலைக்கு செல்லும் பெண்க ளுக்கும், கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களுக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. மற்ற பெண்களின் கூட்டத்திற்கு நடுவே அவர்கள் நிற்பதையே தவிர்த்து வருவார்கள். இந்த பிரச்சனை அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை நிலைமையை உண்டாக்கி விடுகிறது.

- Advertisement -

இதற்காக ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகம் நிறைந்த அக்ரூட் அதாவது ஆங்கிலத்தில் வால்நட் என்று சொல்லக்கூடிய இந்த உலர் பொருளை தோலுடன் வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஏழு வால்நட்டை எடுத்து அதனை இடித்து அதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதியை தனியாகவும் அதன் மேல் இருக்கும் தோலை தனியாகவும் எடுத்து வைக்க வேண்டும்.

valnut

பின்னர் இந்தத் தோலை சற்று பொடியாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடு ஏறியதும் அதனுள் இந்த தூளை சேர்த்து அதிகமான தீயில் வறுக்க வேண்டும். இவை நன்றாக வறுபட்டு கருகி வரும் வரை இவற்றை வறுத்து கொண்டே இருக்க வேண்டும். அந்த தோல் முழுவதுமே கருத்து கருகிய உடன் அடுப்பை அனைத்து இவற்றை ஆற வைக்க வேண்டும். அதன் பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு சல்லடை பயன்படுத்தி சலித்து வைத்துக் கொண்டு ஒரு டப்பாவில் போட்டு கொள்ள வேண்டும்.

- Advertisement -

பயன்படுத்தும் முறை:
டப்பாவில் உள்ள பவுடரில் இருந்து ஒரு ஸ்பூன் பவுடரை எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் இதனை 12 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு முகத்தில் எங்கு தேவையற்ற முடி இருக்கிறதோ அந்த இடத்தில் இதனை லேசாக தடவி ஒருமுறை மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும். பின்னர் சாதாரண தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அதன் பின் ஒரு மணி நேரத்திற்கு சோப்பு எதுவும் சேர்க்க கூடாது.

face

இவ்வாறு தினமும் 3 வேளை என ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்ற முடியும்.

- Advertisement -