உங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.

ஒருவர் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டே வருகிறார் என்றால், அவர்களுக்கு முதலில் கிடைக்கக்கூடிய பெயர் ‘அதிர்ஷ்டம் கெட்டவர்’ என்பது தான். ஆனால் அதிகப்படியான தோல்வியை சந்திப்பவர்கள், வாழ்க்கையில் அதிவேகமாக முன்னேற போகிறார்கள் என்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அதாவது அதிக இஷ்டத்தை நாம் எதன் மேல் வைக்கின்றோமோ, அதுவே நமக்கு அதிர்ஷ்டமாக மாறுகிறது என்பதுதான் உண்மை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை இஷ்டப்பட்டு கொண்டே இருங்கள். காலப்போக்கில் அதிர்ஷ்டமாக மாறி உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். திருமணமாக வேண்டுமென்றால், அதன் மேல் இஷ்டப்பட்டு கொண்டே இருங்கள். காலப்போக்கில் அதுவும் உங்களுக்கு வசமாகிவிடும். நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் அதன்மேல் இஷ்டப்பட்டு கொண்டே இருங்கள். உங்களுக்கு அதுவே அதிர்ஷ்டமாக மாறிவிடும். புரிகிறதா? நீங்கள் இஷ்டப்பட்டு கொண்டே இருக்கும் ஒரு விஷயம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக மாறவேண்டும் என்றால், அதை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிறிய பரிகாரமும் உள்ளது அதைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

agal-vetrilai

முதலில் வெற்றிலை காம்பில் தீபமா? என்று படித்தவுடன் சிலர் அதிர்ச்சி அடைந்து இருக்கலாம். ஏனென்றால் வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி. முதலில் வெற்றிலைக்காம்பு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சேதாரம் இல்லாத 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 6 காம்புகளையும் நல்லெண்ணெய்குல் போட்டுவிடலாம். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றியை இருந்தும் நல்ல நறுமணம் வீசும். இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

vetrilai

இந்தப் பரிகாரத்தை நீங்கள் எப்படி நினைத்து செய்தாலும் சரி. நம்மிடம் வாசம் செய்யும் மூதேவியானவள் நம்மை விட்டு விலக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் சரி. அல்லது காம்பில் வாசம் செய்யும் பார்வதிதேவியின் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக இருந்தாலும் சரி. இது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது. எந்த ஒரு சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். மனத் திருப்தியோடு செய்வதற்கு ஒரு உதாரணத்தை வேண்டுமென்றாலும் இந்த இடத்தில் கூறலாம்.

- Advertisement -

lakshmi

இரண்டு பேரிடம் ஒரே கேள்வி கேட்கப்பட்டது? ஸ்ரீதேவி நடந்து செல்வது அழகா? மூதேவி நடந்து செல்வது அழகா? என்ற கேள்வியை கேட்டார்கள். ஒருவன் சொன்னான்! ஸ்ரீதேவியின் நடை தான் அழகு என்று! மற்றொருவன் சொன்னான் மூதேவியின் நடை தான் அழகு என்று! எப்படி? ஸ்ரீதேவி வீட்டின் உள்ளே நடந்து வருவது அழகு. மற்றொருவன், மூதேவி வீட்டை விட்டு வெளியே நடந்து செல்வது அழகு. புரிகிறதா? பரிகாரம் என்பது பார்ப்பவர்களின் கண்களிலும், சிந்திப்பவர்களின் எண்ணத்திலும் தான் உள்ளது. இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் எந்த ஒரு கஷ்டமும் நமக்கு வந்துவிடாது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வர வேண்டும் என்றும், இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களிடம் இருக்கும் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்துமா இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஆனால் நன்மை நடக்குமா? என்ற சந்தேகத்தோடு மட்டும் எந்த ஒரு பரிகாரத்தையும் செய்ய வேண்டாம்.

இதையும் படிக்கலாமே
உங்களை கோடீஸ்வரராக விடாமல் தடுக்கும் எந்த ஒரு கண்திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 7 சின்ன வெங்காயம் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Betel leaf spiritual. Spiritual significance of betel. Vetrilai thanthirigam in tamil. Vetrilai pariharam in tamil.