நாளை(28/11/2020) பரணி தீபம் அன்று வீட்டில் இந்த 5 விளக்குகளை ஏற்றி வைத்தால் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

- Advertisement -

நாளை அதிகாலையில் திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றும் வேளையில் அனைவரும் அதை தொலைக்காட்சி மூலமாக கண்டு ரசிக்கலாம். பரணி தீபத்தின் தத்துவம் என்ன தெரியுமா? பரணி தீபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளை, நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். எதற்காக ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுகிறார்கள்? ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. இது போல் வீட்டிலே நாமும் ஏற்றலாமா? எனில் எப்போது ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? என்பது போன்ற பல சந்தேகங்களுக்கு இப்பதிவின் மூலம் விடையை தெரிந்து கொள்ளலாம்.

barani-deepam

கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. ஆனால் நாம் வீடுகளில் காலையில் ஏற்றுவதை விட மாலையில் ஏற்றி வழிபடலாம். மாலை வேளையில் ஐந்து மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம். சிவபெருமானை வேண்டி வணங்கக் கூடிய பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும் என்பது ஐதீகம்.

- Advertisement -

ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ எவ்வளவோ தவறுகளை செய்கிறார்கள். அவைகளில் இருந்து விமோசனம் பெற கார்த்திகை மாத பௌர்ணமி அன்று ஏற்றக்கூடிய பரணி தீபத்தை வீட்டிலும் முறையாக ஏற்றி வழிபடலாம். அதை எப்படி ஏற்றுவது தெரியுமா? ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். பரணி தீபத்தன்று தனியாக ஐந்து விளக்குகளை ஏற்றுவது தான் விசேஷம்.

neideepam

வீட்டில் வழக்கம் போல் பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் தனியாக ஒரு தாம்பூலத் தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள் குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணையை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் மிக மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

ஒருமுறை கைலாயத்தில் விஷ்ணுவிற்கும், பிரம்ம தேவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது சிவபெருமான் அங்கு ஜோதி பிழம்பாக தோன்றினார். விஷ்ணுவிற்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர்? என்கிற போட்டி இருந்தது. இடையில் சிவபெருமான் தோன்றியதால் சிவபெருமானுடைய அடியையும், முடியையும் காண முடியுமா? என்கிற கேள்வி எழுந்தது. அதாவது அடி பகுதியையும், உச்சியின் தலைப் பகுதியையும் காண முடியுமா? என்பது தான் வாதம். இதற்காக பிரம்ம தேவர் அன்ன வடிவில் உயர்ந்தும், விஷ்ணு வராக வடிவிலும் தாழ்ந்து பார்க்க முயன்று தோற்றுப் போனார்கள். ஜோதி ரூபமாக இருக்கும் சிவபெருமானே மும்மூர்த்திகளில் பெரியவர் என்பது அந்நாளில் உணரப்பட்டது.

mumoorthy

விஷ்ணு, சிவன், பிரம்மன் இம்மூவரும் ஒரே ஸ்வரூபமே. இவர்களுக்குள் போட்டிகள் எழுந்ததும் உலகிற்கு தத்துவத்தை உணர்த்துவதற்காகவே. ஜோதி ரூபமாக விளங்கிய சிவபெருமானின் ரூபத்தை மற்றவர்களும் காண செய்ததாக புராணம் கூறுகிறது. அவரை வணங்குவதற்காகவே இந்த தீபம் ஏற்றப்படுகிறது. இந்த சமயத்தில் வீட்டில் ஏற்றும் விளக்கில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் உங்களை வெல்வதற்கு யாராலும் முடியாது. அந்த அளவிற்கு சிறப்பான பலன்களைக் கொடுக்க வல்லது.

- Advertisement -

lingam

லிங்கம் வைத்திருப்பவர்கள் பரணி தீபத்தன்று லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். இன்னாளில் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் அற்புதமான மந்திரத்தை 108 முறை உச்சரித்தால், செய்த பாவங்கள் அனைத்தும் தீரும். நாளைய நன்னாளில் அனைவரும் சிவபெருமானுக்காக வேண்டி முழு பக்தி சிரத்தையுடன் தீபமேற்றி, மந்திரங்களை வாசித்து வாழ்வில் சகல யோகங்களை பெற்று பயன்பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அந்த மாங்கல்ய தோஷத்தைப் போக்கி, தீர்க்க சுமங்கலி வரத்தைப் பெற, பெண்கள் செய்ய வேண்டிய சுலபமான ஒரு பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -