நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர பரணி தீபம்

house dheepam
- Advertisement -

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். அதிலும் கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய தீபத்திருநாளை பற்றியும் பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால் இந்த தீபத்திற்கு முந்தைய நாள் ஏற்றப்படும் பரணி தீபம் மிகவும் முக்கியமான ஒன்று தான். இந்த நாளில் ஏற்றக் கூடிய தீபமானது நம் பூமாதேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏற்றும் தீபமாக பார்க்கப்படுகிறது. இந்த தீபத்தை நாம் எப்படி ஏற்றினால் நம்முடைய நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக வீடு நிலம் வாங்க பரணி தீபம் ஏற்றும் முறை

நம்முடைய இந்து சாஸ்திரத்தில் தீபம் என்பது தெய்வத்தின் சொரூபமாக தான் பார்க்கப்படுகிறது. ஆகையால் தான் தீபத்திற்கென தனியாக ஒரு மாதத்தை ஒதுக்கி அந்த மாதம் முழுவதும் தீபத்தாலேயே தெய்வங்களை ஆராதனை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளோம் .அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் அனைத்து தெய்வத்திலும் இந்த பரணி தீபத்திற்கும் தனியான விசேஷ பலன்கள் உண்டு.

- Advertisement -

இந்த தீபத்தை எப்படி ஏற்றினால் நம்முடைய நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். கார்த்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் தீபம் பரணி தீபம் என்று சொல்லப்படுகிறது. பூமாதேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏற்றும் தீபத்தை நம்முடைய நிலம் தொடர்பான பிரச்சனைக்கு எப்படி பரிகார தீபமாக மாற்றுவது என்று பார்க்கலாம்.

சொந்தமாக வீடு நிலம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பரணி தீபத்தின் அன்று 9 அகல் தீபம் ஏற்ற வேண்டும். புதிதாக 9 அகல் விளக்கை வாங்கி அதில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு 9 அகலையும் ஒரே நேர்கோட்டில் தரையில் வைத்து ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டிற்கு வெளியில் ஏற்ற வாய்ப்புள்ளவர்கள் ஏற்றுங்கள். அடுக்குமாடி குடியிருப்பவர்களுக்கு இது சாத்தியமில்லை. அவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏற்றலாம். ஆனால் தரையில் தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அடுத்து பூர்வீக சொத்து அல்லது நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள். தாங்கள் வாழும் இடத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர 18 விளக்கை ஒரே நேர்கோட்டில் ஏற்ற வேண்டும். இது ஒரே வரிசையில் தான் இருக்க வேண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்றக் கூடாது. இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதே தீபத்தை இன்னும் ஒரு பரிகாரமாக தீபமாகவும் மாற்றி ஏற்றலாம். சிலருக்கு எப்பொழுதும் ஏதேனும் விபத்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஒன்று தவறி கீழே விழுந்து விடுவார்கள் அல்லது வண்டி வாகனங்களில் செல்லும் போது கீழே விழுந்து விடுவார்கள். இப்படியான விபத்துக்களில் அடிக்கடி சிக்குபவர்கள் இந்த பரணி தீப அன்று எட்டு தீபத்தை வரிசையாக ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர கார்த்திகை பிரதோஷம்

பரணி தீபன்று ஏற்றக் கூடிய தீபத்தை இது போல ஏற்றினால் சொத்து பிரச்சனை, சொந்த வீடு பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை என அனைத்துக்கும் தீர்வாக அமையும். இந்த தீப பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் ஏற்று பலனடையலாம்.

- Advertisement -