கடன் தீர கார்த்திகை பிரதோஷம்

nandhi siva lingam
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே விசேஷமானது தான். இந்த கார்த்திகை மாதம் தெய்வ வழிபாட்டிற்கென உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதமானது முருகப்பெருமான், மகாலட்சுமி தாயார், சிவபெருமான், ஐயப்பன் போன்ற பல்வேறு தெய்வ வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த மாதமாக உள்ளது. அதுமட்டுமின்றி கார்த்திகை மாதம் தீப மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் வெள்ளிக்கிழமையுடன் வந்திருக்கும் பிரதோஷ நாளில் சிவபெருமானை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய கடன் தீர்ந்து நம் வாழ்வில் செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் என்றாலே சிவபெருமானுக்கு உகந்தது தான். பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் போது நம் வாழ்வில் உள்ள சகல தோஷங்களையும் நீக்குவார் என்பதே இந்த பிரதோஷ வழிபாட்டின் பொருள். தேவர்கள் தம்முடைய துன்பங்களை தீர்க்க சிவபெருமான வேண்டி அருள் பெற்ற இன்றைய தினத்தில் நாமும் நம்முடைய கடன் தீர இறைவனை வேண்டி வணங்கலாம்.

பிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையிலே நீராடி வீட்டில் விளக்கேற்றி சிவபெருமானின் நாமத்தை ஜெபிக்க வேண்டும். எந்த விரதத்தை மேற்கொண்டாலும் அன்றைய தினத்தில் எந்த தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அவர்களுடைய நாமத்தை நாள் முழுவதும் ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டும். இன்றைய தினத்தில் உபவாசம் இருந்து விரதம் இருப்பவர்க்கு இருக்கலாம். முடியாதவர்கள் எளிமையான உணவு மேற்கொண்டு விரதம் இருக்க வேண்டும்.

- Advertisement -

அன்றைய தினம் மாலை 4:30 லிருந்து 6 மணியிலான பிரதோஷ காலத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானின் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி கலந்து கொள்ளும் போது சிவபெருமானுக்கு அபிஷேக அர்ச்சனைக்கு நம்மால் ஆன பொருட்களை வாங்கி கொடுப்பது மிகவும் சிறப்பு. பெரும்பாலும் வில்வம், வன்னி இலை, பால், தேன், புனுகு, அரகாஜா போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை தீர்க்க வழிவகுக்கும்.

இந்த கார்த்திகை வெள்ளிக்கிழமை பிரதோஷத்தில் சிவபெருமானுக்கு பழவகைகளை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுப்பது நம்முடைய கடனை அடைக்க வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. பழ வகைகளில் உங்களால் என்ன பழ வகைகளை வாங்க முடியுமோ அனைத்தையும் வாங்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதனால் கடன் அடைவதுடன் செல்வ வளமும் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை சிவாலயத்தில் செய்வது மிகவும் சிறந்த பலனை கொடுக்கும். சிவாலயம் செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் சிவலிங்கம் வைத்திருதால் வீட்டிலேயே இந்த பழ அபிஷேகத்தை செய்து சிவபெருமானை மனதார நினைத்து அவருடைய நாமத்தை சொல்லி வணங்கிய பிறகு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்

நாளைய தினம் இந்த முறையில் பிரதோஷ வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ்வதுடன் செல்வ செழிப்புடன் வளமாக வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்தால் சிவபெருமானின் அருளை முழுமையாக பெறலாம்.

- Advertisement -