புதன்கிழமை பிரதோஷ வழிபாடு

sivan5
- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அவ்வளவு அற்புதம் வாய்ந்த பிரதோஷமானது நாளை (21.02.2024) புதன்கிழமை அன்று, வரவிருக்கின்றது. நாளைய தினம் யாரெல்லாம் கட்டாயம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யணும். நாளைய தினம் நம்முடைய கையால் காளை மாட்டுக்கு எந்த ஒரு பொருளை வாங்கி தானம் செய்யணும், என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புதன்கிழமை சிவபெருமான் வழிபாடு

புதன் திசை நடப்பவர்கள், புதன் பகவானை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், புதன் தோஷம் கொண்டவர்கள், எல்லாம் கட்டாயம் புதன்கிழமை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை சென்று வழிபாடு செய்தால், புதன் பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் குழப்ப நிலையில் இருப்பவர்கள், வேலையில் பிரச்சனை கொண்டவர்களும் நாளை பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

புதன் கெட்டுப் போய்விட்டால் நம்முடைய புத்தி தடுமாறி விடும். புத்திசாலித்தனம் குறைந்து விடும். இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். நீங்க புதன்கிழமை புதன் பகவானை நினைத்து, பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் புதன் பகவானின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

புதன் கெட்டுப்போன சமயத்திலும், புத்திசாலித்தனத்தோடு செயல்படலாம். படிக்காத பிள்ளைகளை புதன்கிழமை பிரதோஷ தினத்தில், பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். புதன் அன்று பிரதோஷ நேரத்தில், சிவபெருமானை வழிபாடு செய்யும்போது நிச்சயமாக அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

- Advertisement -

திறமை குறைந்த குழந்தைகள், பள்ளியில், படிப்பில் அதிக ஆர்வம் இல்லாத குழந்தைகளுக்கு நாளைய தினம் சிவன் வழிபாடு ரொம்ப ரொம்ப சிறப்பு. எல்லா குழந்தைகளுக்குள்ளுமே திறமை இருக்கிறது. ஆனால் அதை வெளிக்கொண்டு வருவதில் சில சிரமங்கள் இருக்கும். அந்த சிரமங்கள் சரியாக இந்த வழிபாடு கை கொடுக்கும்.

இது தவிர உங்களுடைய குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடக்காமல் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தால், அவர்களை நாளைய தினம் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய சொல்லுங்கள். நிச்சயமாக சுப காரிய தடைகள் விலகும். நாளைக்கு சிவன் கோவிலுக்கு செல்லும்போது உங்கள் கைகளால் சிவபெருமானுக்கு முடிந்த பொருட்களை வாங்கி செல்லலாம்.

- Advertisement -

பால், தேன், வில்வ இலை, இளநீர், விபூதி இப்படி உங்கள் வசதிக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை வாங்கிச் செல்ல முடியுமோ வாங்கி கொண்டு போய் கோவிலில் சேர்த்து விடுங்கள். பிரதோஷ நேரம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை இருக்கிறது. அந்த சமயத்தில் சிவன் ஆலயங்களில் அமர்ந்து மௌனமாக சிவபெருமானை மட்டும் நினைத்து தியானித்து பிரார்த்தனை வைத்தால் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

கோவிலில் நிச்சயம் கூட்டம் இருக்கும். கூட்டமாய் இருக்கும் இடத்தை தவிர்த்து விட்டு, கோவிலில் ஏதாவது ஒரு இடம் நிச்சயமாக காலியாக இருக்கும். அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து தியான நிலையில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் வழிபாடு செய்வது கோடி புண்ணியத்தை கொடுக்கும்.

இதோடு சேர்த்து நாளை, காளை மாட்டுக்கு உங்கள் கையால் ‘செவ்வாழை பழம்’ வாங்கி தானம் கொடுங்கள். இதை பசு மாட்டிற்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் சில பேருக்கு வரும். நாளைய தினம் காளை மாட்டுக்கு தானம் செய்வதுதான் சிறப்பான பலனைத் தரும். 2 செவ்வாழை, 4 செவ்வாழை, வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு டெசன் செவ்வாழையை வாங்கிக் கூட காளை மாட்டிற்கு தானம் கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

உங்களை பிடித்த எல்லா தோஷங்களும் விலகி சிவபெருமானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இந்த தானத்தை நாளைய தினம் எந்த நேரத்தில் செய்தாலும் தவறு கிடையாது. இந்த தானத்தை எந்த பிரதோஷ நாளில் வேண்டுமென்றாலும் செய்யலாம். முடிந்தால் மாலை பிரதோஷ நேரத்திலேயே இந்த வாழைப்பழ தானத்தை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -