சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

saturn putha astrology
- Advertisement -

ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் தான் இந்த புதபகவான். இவருடைய அனுகிரகம் இருந்தால் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, தொழில் என அனைத்திலும் சிறந்து விளங்கக் கூடிய தன்மையை பெறலாம். அதே வேளையில் ஜோதிடத்தில் நீதிமானாக திகழக் கூடியவர் சனி பகவான். இவர் ஒருவருடைய செயல்களுக்கு ஏற்ப பலன்களை தரக் கூடியவர்.

இந்த சனிபகவானாவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய மூலத்திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி கும்ப ராசியில் புதபகவானும் நுழைய உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவருக்கும் இந்த செயற்கையால் 12 ராசிகளுக்கும் பலவிதமான மாறுதல்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

அதில் சில ராசிகள் நற்பலன்களையும் சில ராசிகள் கெடுப்பலன்களையும் பெற உள்ளார்கள். அந்த வகையில் மூன்று ராசிகள் பெரும் அதிர்ஷ்டத்தை பெற உள்ளார்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த செயற்கையினால் பெரும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இதுவரை நிலுவையில் உள்ள காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும், தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

கும்பம்

சனி புதனின் இந்த சேர்க்கையே கும்ப ராசியில் தான் நிகழ உள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள். இவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் மரியாதை அதிகரிக்கும், பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் பெறுவார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும், திருமணம் கை கூடும். குடும்ப வாழ்க்கை சுமூகமாக இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும் பொருளாதார நிலை உயரும்.

மகரம்

இந்த ராசிக்காரர்களுக்கு சனி புதனின் சேர்க்கையால் அதிர்ஷ்ட மழையே பொழியப் போகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் பதவி உயர்வு கிடைக்கும். பேச்சு திறமையால் வருமானம் அதிகரிப்பீர்கள். இது வரை இருந்து வந்த பணத்தட்டுப்பாடு நீங்கி பொருளாதார நிலையில் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள்.

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் மாற்றம் 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அதே போல இரண்டு கிரகங்கள் ஒன்றாக சேரும் செயற்கையாளும் இது போன்ற மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் சனி புதனின் இந்த சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்களின் குறித்த தகவல்களை இந்த பதிவில் அறிந்திருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற பெருமாள் வழிபாடு

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான். இதிலும் அவரவரின் கர்ம பலன் கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்ற மாறுதல்கள் ஏற்படும் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -