அம்பயரின் பின்னால் இருந்து பந்துவீசிய இந்திய வீரர் -விளையாடமாட்டேன் என்று நகர்ந்த பின்ச் – வீடியோ

rayudu

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

lose

டாஸ் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி விளையாட துவங்கிய ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் விளையாடி 230 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளரான சாஹல் 6 விக்கெட்டுகளை குவித்து அசத்தினார்.

இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணி வீரரான புவனேஷ்வர் குமார் பந்துவீசும் போது அம்பயருக்கு பின்னால் இருந்து பந்துவீசினார். இதனை எதிர்பாராத பின்ச் அந்த பந்தினை கணிக்க முடியாமல் அந்த பந்தை தவிர்த்து வெளியேறினார். இது விடியோவாக வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

தற்போது இந்திய அணி 231 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆட ஆரம்பித்துள்ளது. இந்திய அணியின் ரோஹித் மற்றும் தவான் பொறுமையாக விளையாட துவங்கி உள்ளனர். தற்போது வரை இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 7 ரன்களை அடித்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

ராகுல் மற்றும் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்வினை முடித்து விடாதீர்கள். அவர்களை மன்னிக்கலாமே – முன்னாள் கேப்டன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்