முதல் ஓவரின் மூன்று பந்துகள் 6,4,4 அடித்த குப்தில் ஆனால், நான்காவது பந்தில் அவரை தூக்கிய புவனேஷ்வர் குமார் – வீடியோ

guptill

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த அணி வெறும் 14.4 ஓவர்களில் 93 ரன்கள் அடித்து இந்திய அணியை விரைவில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது. தங்களது தரப்பில் டெய்லர் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் போல்ட் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் ஆட்டம் தொடங்கிய முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். பிறகு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். ஆனால், அதற்கடுத்த பந்தில் குப்திலை வீழ்த்தி அதிர்ச்சியுடன் அவரை வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். இதோ அந்த வீடியோ :

எளிய இலக்கினை துரத்திய நியூசிலாந்து அணிக்கு இந்த விக்கெட் ஒரு இழப்பு இல்லை என்றாலும் புவனேஷ்வர் குமாரின் மனம் தளராத பந்துவீச்சு இந்த விக்கெட் மூலம் தெரிந்தது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில் தோனி அணிக்கு திரும்ப வேண்டும் என்று தோனி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ஐந்து முக்கிய விக்கெட்டுக்களை சாய்த்து வெற்றிக்கு வித்திட்ட போல்ட் பவுலிங் – வீடியோ வடிவில் உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்