ஐந்து முக்கிய விக்கெட்டுக்களை சாய்த்து வெற்றிக்கு வித்திட்ட போல்ட் பவுலிங் – வீடியோ வடிவில் உள்ளே

boult
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த அணி வெறும் 14.4 ஓவர்களில் 93 ரன்கள் அடித்து இந்திய அணியை விரைவில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது. தங்களது தரப்பில் டெய்லர் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் போல்ட் தட்டிச்சென்றார்.

- Advertisement -

இந்த போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சு மூலம் இந்திய அணியை காளிசெய்தார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் போல்ட். அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் இதோ வீடியோ வடிவில் உங்களுக்காக இந்த பதிவில் இணைத்துள்ளோம். வீடியோ :

- Advertisement -

இந்த வெற்றி நியூசிலாந்து அணிக்கு சற்று ஆறுதலை தந்திருக்கும் என்றே கூறலாம். தோனி மற்றும் கோலி போன்ற வீரர்கள் இல்லாத குறை இந்த போட்டியில் தெரிகிறது என்பது போல இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த தோல்வி குறித்து உங்களது கருத்துக்களையும் கமெண்ட் பகுதியில் குறிப்பிடலாம் நண்பர்களே.

இதையும் படிக்கலாமே :

ப்ளீஸ் வேற எதுவும் பேச வேண்டாம். தோல்விக்கு முழுகாரணமும் இதுதான் வெளிப்படையாக பேசிய – கேப்டன் ரோஹித்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -