ஜாண்டி ரோட்ஸ் போல ரன்னிங்கில் பறந்து கேட்ச் பிடித்த இந்திய வீரர் – வீடியோ

rayudu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் போட்டியில் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பின்ச் மற்றும் கேரி துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

lose-1

தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய திணறிவரும் பின்ச் 14 ரன்களிலும் கேரி 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கவாஜா மற்றும் ஆட்டமிழந்தனர். ஜோடி ஓரளவுக்கு தாக்கு பிடித்து விளையாடியது. கவாஜா 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மார்ஷ் 39 ரன்களை அடித்தார்.

- Advertisement -

அதிகபட்சமாக ஹாண்ட்ஸ்கோம்ப் 58 ரன்கள் அடித்தார். போட்டியின் போது 35ஆவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் அந்த பந்தை தூக்கியடித்தார். அந்த பந்தை பார்த்தபடி ஓடி வந்து பறந்தவாறு கேட்ச் பிடித்தார் இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார். அந்த அற்புதமான கேட்ச் விடியோவாக வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

தற்போது இந்திய அணி 231 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆட ஆரம்பித்துள்ளது. இந்திய அணியின் ரோஹித் மற்றும் தவான் பொறுமையாக விளையாட துவங்கினர். தவான் 23 ரன்களில் வெளியேறினார் ரோஹித் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி மற்றும் தோனி தொடர்ந்து விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 72 ரன்களுடன் விளையாடி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

சரியாக ஸ்டம்பிங் செய்தேனா குழம்பிய தோனி. விக்கெட்டினை உறுதிபடுத்திய கோலி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -