சரியாக ஸ்டம்பிங் செய்தேனா குழம்பிய தோனி. விக்கெட்டினை உறுதிபடுத்திய கோலி – வீடியோ

dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பின்ச் மற்றும் கேரி துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

rayudu

தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய திணறிவரும் பின்ச் 14 ரன்களிலும் கேரி 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கவாஜா மற்றும் மார்ஷ் ஜோடி ஓரளவுக்கு தாக்கு பிடித்து விளையாடியது. கவாஜா 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அப்போது 24 ஓவரின் முதல் பந்தை வீசவந்தார் சாஹல். அந்த பந்தை ஏறி அடிக்க வந்த மார்ஷ் அந்த பந்தை அடிக்க தவறினார். இதனால் பந்தை பிடித்த தோனி ஸ்டம்பிங் செய்தார் இருப்பினும் குழப்பத்தில் அம்பயரை நோக்கி அவுட்டா என்று சரிபார்க்க சொன்னார். இதனை கவனித்து கொண்டிருந்த கேப்டன் கோலி தோனியை பார்த்து நீங்கள் அவுட் செய்து விட்டீர்கள் என்று காய் காட்டினார். இது வீடியோவாக வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

தற்போது இந்திய அணி 231 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆட ஆரம்பித்துள்ளது. இந்திய அணியின் ரோஹித் மற்றும் தவான் பொறுமையாக விளையாட துவங்கி உள்ளனர். ரோஹித் 9 ரன்களில் வெளியேறினார். கோலி மற்றும் தவான் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 14 ஓவர்களுக்கு 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதிலும் படிக்கலாமே :

அம்பயரின் பின்னால் இருந்து பந்துவீசிய இந்திய வீரர் -விளையாடமாட்டேன் என்று நகர்ந்த பின்ச் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்