ருத்ராச்சம் அணிவதில் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை

0
2620
shivan with rudhraksha
- விளம்பரம் -

ருத்ராட்சம் என்ற பெயரின் பொருள் சிவனின் கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. உருத்திராக்க மரங்களிலிருந்து இருந்து பெறப்படும் ருத்ராட்ச மணிகளை சிவனடியார்கள் பலரும் சிவ பக்தர்களும் அணிவது வழக்கம். ருத்ராட்ச கொட்டைகளை அணிவதனால் அறிவியல் ரீதியாக பல பலன்கள் உண்டு. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

rudhraksha

இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில், டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் ருத்ராட்சம் குறித்து செய்த ஆய்விற்குப் பின்னர் ருத்ராட்சம் உலக புகழ்பெற்றது.

Advertisement

அந்த ஆய்வும் முடிவில் ருத்ராட்சத்திற்கு மூன்று முக்கிய தன்மைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

*சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
*காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
*அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive).

rudharaksha maalai

ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதை ஆய்வில் தெரிவித்தனர்.

அதோடு ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு தன்னார்வமும், மனோதிடமும் அதிகரிக்கிறது என்பதையம் அவர்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவிற்கு பின்பு உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் பலரும் ருத்ராட்ச மணிகளின் பலனை அறிந்து அதை அணிய தொடங்கியுள்ளனர்.

Advertisement