உங்கள் பிறந்தநாளில் நீங்கள் இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன்கள் உண்டு

birthday

“ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும்” என்பது பழமொழி. ஆனால் தற்காலத்தில் நாள் ஒன்று போனால் வயதொன்று போகும் என்கிற ரீதியில் உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியான அவசர யுகத்தில் கொண்டாட்டங்கள் மட்டுமே நம்மை மகிழ்ச்சியுடன் இருக்க செய்யும் ஒரு விடயமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அளவு கடந்த ஆனந்தத்தை தரக்கூடிய ஒரு நாளாகும். அனைவரின் வாழ்விலும் வருடத்திற்கு ஒருமுறை வரும் பிறந்த நாள் எனும் இந்த அற்புதமான தினத்தில் வாழ்வில் வளமையும், எப்போதும் மகிழ்ச்சியான நிலையையும் கொடுக்கக் கூடிய சில எளிய தாந்திரிக பரிகார முறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

horse shoe laadam

குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.

உங்கள் பிறந்த நாள் அன்று காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் முன்பாக கட்டாயம் உங்கள் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமி, விநாயகர்,அம்பாள் போன்ற தெய்வ படங்களை முதலில் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

blessings aasirvadham

உங்களின் நட்சத்திரப் பிறந்த நாள் அல்லது ஆங்கில மாத பிறந்தநாள் எதுவாகிலும் அன்றைய தினம் காலையில் சீக்கிரம் எழுந்து, குளித்து முடித்து விட்டு, இறைவனை வழிபடுவதற்கு முன்பாக உங்கள் தாத்தா – பாட்டி மற்றும் தாய் – தந்தையர் ஆகியோரை வணங்கி, அவர்களின் பாதங்களில் விழுந்து ஆசிகளைப் பெறுவது உங்களுக்குள் பிரபஞ்ச ஆற்றலை அதிகரித்து வாழ்வில் எப்போதும் நன்மைகளே ஏற்படுத்தக்கூடிய ஒரு பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -

mahalakshmi

உங்கள் பிறந்த தினத்தன்று 21 கிராமம் தரமான அரிசியை ஒரு மஞ்சள் நிற காகிதத்தில் போட்டு நன்கு மடித்து உங்கள் பணம் வைக்கும் பர்சு மற்றும் சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் அன்றைய தினம் உங்களுக்கு வீண் செலவுகள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதோடு, புதிய பண வரவுகளை ஏற்படுத்தவல்ல ஒரு அற்புதமான பரிகாரமாக இருக்கிறது.

arisi

பிறந்த நாளைக்கு அணிந்துகொள்ள புத்தாடைகளை அணிய விரும்புபவர்கள், அந்த புத்தாடைகளை உங்கள் பிறந்த நாளுக்கு முன்பாக துவைத்து காயப்போட்டு பின்பு அணிந்து கொள்வது நல்லது. அப்படி துவைக்கப்பட்ட புத்தாடையின் அனைத்து முனை பகுதிகளிலும் சிறிதளவு மஞ்சள் தடவி அணிந்து கொள்வது உங்களின் சக்தி உடல்களில் இருக்கின்ற தீய அதிர்வுகளை போக்குவதோடு கண்திருஷ்டி, ஏற்படாமல் தடுத்து வாழ்வில் வளமையை குறிக்கும் ஒரு வழிமுறையாகும்.

Today Gold rate

உங்களுக்கே சொந்தமாக தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்கள் ஏதேனும் இருந்தால் உங்கள் பிறந்த நாளன்று அவற்றை அணிந்து கொள்வது மிகவும் நன்மை தரும். ஏனெனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு நேர்மறையான மற்றும் தெய்வீக சக்திகளை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் அதிகமுள்ளது. எனவே மற்ற தினங்களில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணியாதவர்கள் பிறந்த நாளில் மட்டுமாவது ,மேற்கூறிய நகைகளை அணிந்து கொள்வதால் நேர்மறையான ஆற்றல்களை உங்களுக்கு ஈர்த்து தந்து நிச்சயம் வாழ்வில் மிக சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் கையிலிருக்கும் அந்த மூன்றெழுத்தின் அர்த்தம் என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Birthday pariharam in Tamil. It is also called as Pirantha naal pariharam in Tamil or Kuthirai laadam in Tamil or Eliya pariharangal in Tamil or Pirandha naalil seiya vendiyavai in Tamil.