பிறந்தநாள் வாழ்த்து பாடல் வரிகள்

- Advertisement -

Birthday song in Tamil: பிறந்தநாள் என்பது ஒரு மனிதன் கொண்டாட கூடிய நாளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாளாகும். அவர்கள் இந்த உலகில் உதித் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து, உற்றார் உறவினர்களை அழைத்து அவர்களிடம் நல்லாசி பெரும் நாளாக இருக்கிறது. அன்றைய தினத்தில் பாடக்கூடிய பிறந்த நாள் வாழ்த்து பாடல் தமிழில் இதோ.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் வரிகள்

லால லால லாலா
லல லால லால லாலா
லால லால லா லா
லல லால லால லாலா

- Advertisement -

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

- Advertisement -

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

- Advertisement -

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்

சர்க்கரை தமிழ் அள்ளி
தாலாட்டு நாள் சொல்லி
வாழ்த்துகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தையை வாழ்த்துக்கூடிய ஒரு நன்னாள் பிறந்தநாள். இன்றைய காலகட்டத்தில் பிறந்தநாளை பலர் ஒரு மிகப்பெரிய விழாவாகவே மாற்றி குழந்தைகளுக்காக பலவற்றை செய்கின்றனர். பொதுவாகவே ஹாப்பி பர்த்டே என்ற ஆங்கில பாடலை தான் பலரும் பிறந்த நாள் அன்று பாடுவது வழக்கம். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் வரிகள் முழுக்க முழுக்க நம் தாய் தமிழ் மொழியிலேயே கொடுத்துள்ளோம்.

இதையும் படிக்கலாமே: தமிழ் எண்கள்

தமிழில் வெளியான முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடல் என்றே இதை கூறலாம். இந்த பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன். இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி. உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் குழந்தைகளுக்காகவும் இந்த பாடலை அவர் இயற்றியுள்ளார்.

- Advertisement -