தமிழ் எண்கள் | Tamil engal

Tamil engal
- Advertisement -

தமிழ் எண்கள் 1-100 வரை – Numbers in Tamil

Tamil engal : இலக்கண ரீதியாக தமிழ் மொழிக்கென உருவான எண்களே தமிழ் எண்கள். இந்த எண்கள் அனைத்தும் தற்போது நாம் பயன்படுத்தும் எண்கள் போல அல்லாமல் எழுத்து வடிவில் இருக்கும். நமது முன்னோர்களின் கல்வெட்டுகளில் தமிழ் எண்களை நம்மால் காண முடிகிறது. ஆனால் பல்வேறு படையெடுப்புகளின் காரணமாகவும் கலாச்சார மாறுபாடுகளின் காரணமாகவும் பிற மொழி எண்களின் பயன்பாடு அதிகமாகி அதுவே தற்போது நடைமுறையிலும் உள்ளது. எனினும் தமிழ் எண்கள் பற்றி அறிவதும் அதை எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்வதும் தமிழர்களாக நமது கடமையாக உள்ளது. அந்த வகையில் இங்கே நாம் ஒன்று முதல் நூறு வரை உள்ள தமிழ் எண்களை குறிப்பிட்டுள்ளோம்.

Numbers in Tamil

Tamil engal

நடைமுறை எண்கள்தமிழ் எண்கள்சுருக்கமான தமிழ் எண்கள்
1-
2-
3-
4-
5-
6-
7-
8-
9-
10௧0
11௰௧௧௧
12௰௨௧௨
13௰௩௧௩
14௰௪௧௪
15௰௫௧௫
16௰௬௧௬
17௰௭௧௭
18௰௮௧௮
19௰௯௧௯
20௨௰௨0
21௨௰௧௨௧
22௨௰௨௨௨
23௨௰௩௨௩
24௨௰௪௨௪
25௨௰௫௨௫
26௨௰௬௨௬
27௨௰௭௨௭
28௨௰௮௨௮
29௨௰௯௨௯
30௩௰௩0
31௩௰௧௩௧
32௩௰௨௩௨
33௩௰௩௩௩
34௩௰௪௩௪
35௩௰௫௩௫
36௩௰௬௩௬
37௩௰௭௩௭
38௩௰௮௩௮
39௩௰௯௩௯
40௪௰௪0
41௪௰௧௪௧
42௪௰௨௪௨
43௪௰௩௪௩
44௪௰௪௪௪
45௪௰௫௪௫
46௪௰௬௪௬
47௪௰௭௪௭
48௪௰௮௪௮
49௪௰௯௪௯
50௫௰௫0
51௫௰௧௫௧
52௫௰௨௫௨
53௫௰௩௫௩
54௫௰௪௫௪
55௫௰௫௫௫
56௫௰௬௫௬
57௫௰௭௫௭
58௫௰௮௫௮
59௫௰௯௫௯
60௬௰௬0
61௬௰௧௬௧
62௬௰௨௬௨
63௬௰௩௬௩
64௬௰௪௬௪
65௬௰௫௬௫
66௬௰௬௬௬
67௬௰௭௬௭
68௬௰௮௬௮
69௬௰௯௬௯
70௭௰௭0
71௭௰௧௭௧
72௭௰௨௭௨
73௭௰௩௭௩
74௭௰௪௭௪
75௭௰௫௭௫
76௭௰௬௭௬
77௭௰௭௭௭
78௭௰௮௭௮
79௭௰௯௭௯
80௮௰௮0
81௮௰௧௮௧
82௮௰௨௮௨
83௮௰௩௮௩
84௮௰௪௮௪
85௮௰௫௮௫
86௮௰௬௮௬
87௮௰௭௮௭
88௮௰௮௮௮
89௮௰௯௮௯
90௯௰௯0
91௯௰௧௯௧
92௯௰௨௯௨
93௯௰௩௯௩
94௯௰௪௯௪
95௯௰௫௯௫
96௯௰௬௯௬
97௯௰௭௯௭
98௯௰௮௯௮
99௯௰௯௯௯
100௧00

நமது அட்டவணையில் பூஜ்ஜியம் என்று சொல்லக்கூடிய சுழியம் விடுபட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். உண்மையில் சுழியம் என்பது ஆரம்ப காலத்தில் இல்லை. அதனாலேயே அது விடுபட்டுள்ளது. ஆனால் பிற்காலத்தில் அந்த எண் புழக்கத்திற்கு வர துவங்கியது.

- Advertisement -

10 முதல் 10,00,00,000 வரை தமிழ் எண்கள்

நூற்றுக்கு மேற்பட்ட எண்களை எப்படி எழுதுவது என்று குழப்பம் அடைய வேண்டாம். இதோ பாத்து முதல் பத்து கோடி வரை எப்படி எழுதுவது என்று கீழே கொடுத்துள்ளோம்.

தமிழ் எண்கள்

நடைமுறை எண்கள்தமிழ் எண்கள்
10
100
1000
10,000௰௲
1,00,000௱௲ (நூறு ஆயிரம்)
10,00,000௲௲ (ஆயிரம் ஆயிரம்)
1,00,00,000௰௲௲ (பத்து ஆயிரம் ஆயிரம்)
10,00,00,000௱௲௲ (நூறு ஆயிரம் ஆயிரம்)

Tamil engal

தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?

தமிழ் எண்களை பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளதே, இதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்ற எண்ண ஓட்டங்கள் பலரது மனதில் இப்போது இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம். தமிழ் எண்களை மிக எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு வாக்கியம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

“கடலை உருண்டையை நுணுக்கி சமைத்து ருசித்து சாப்பிட என்னை அம்மா கூப்பிட்டார்” இதுவே அந்த வாக்கியம். இந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தையும் தனியாக எடுத்து பிரித்து எடுத்துட்டு அதனுடன் ஒன்று முதல் ஒன்பது வரையிலான தமிழ் எண்களை ஒப்பிட்டு நினைவில் வைத்துக் கொள்ளலாம். அதற்கான விளக்கப்படம் தான் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Numbers in Tamil

தமிழ் எண்களை எப்படி எழுதுவது?

நீங்கள் முதல் 9 எண்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும் உங்களால் மற்ற தமிழ் எண்கள் (Tamil engal) அனைத்தையும் எளிதாக எழுத முடியும். உதாரணமாக ஒன்று என்பதை “௧” இப்படி எழுதுவோம். அதுவே 11 என்றால் இரண்டு ஒன்று அதாவது “௧௧” இப்படி எழுதலாம். அதேபோல ஐந்து என்பதை “௫” இப்படி எழுதுவோம், ஆறு என்பதை “௬” இப்படி எழுதவும். 56 என்பதை ஐந்தையும் ஆறையும் சேர்த்து எழுதினாலே போதும் ௫௬ (56) வந்துவிடும்.

மேலே குறிப்பிட்ட உதாரணமானது எளிதாக எழுதக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட தமிழ் எண்கள் (numbers in Tamil), ஆனால் பழங்காலத்தில் தொன்மை வாய்ந்த தமிழ் எண்களை எழுதுவதற்கு நாம் ஒன்று முதல் பத்து வரை நினைவில் வைத்திருக்க வேண்டும். பத்து என்ற எண்ணை நாம் “௰” இப்படி எழுதுவோம். 20 என்ற எண்ணை எழுத இரண்டு பத்து அதாவது “௰௰” இப்படி எழுதுவோம். 30 என்ற எண்ணை எழுத மூன்று பத்து, இப்படி 99 வரை எழுத முடியும். ஆனால் நூறு என்ற எண்ணை குறிப்பிட “௱” இந்த எழுத்து பயன்படுகிறது. அதேபோல ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், 10 லட்சம், ஒரு கோடி, 10 கோடி இப்படி பல்வேறு எங்களை தமிழில் எப்படி எழுதுவது போன்ற தகவல்களையும் மேலே நாம் கொடுத்துள்ளோம்.

- Advertisement -