கருப்பு எண்ணெயை தலையில் இப்படி போட்டால் கருகருவென முடி காடு போல வளர தொடங்கி விடும்.

- Advertisement -

முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய எண்ணெய் வகைகளில் இந்த விளக்கெண்ணெக்கு முதலிடம் உண்டு. விளக்கெண்ணெயில் இரண்டு வகை இருக்கின்றது. மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய விளக்கெண்ணெய், கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய விளக்கெண்ணெய். இந்த குறிப்புக்கு Black Castor Oil என்று சொல்லப்படும் கருப்பு நிற விளக்கெண்ணெயை பயன்படுத்துங்கள். முடி வளர்ச்சி பல மடங்காக அதிகரிக்கும். பொதுவாக விளக்கெண்ணெயை அப்படியே தலையில் வைத்தால் பிசுபிசுப்பாக இருக்கும் என்று நம்மில் நிறைய பேர் பயன்படுத்துவது இல்லை. ஆனால் விளக்கெண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதில் அதிக பங்கு கொண்டது. இந்த கருப்பு விளக்கெண்ணெயை வைத்து இரண்டு ஹேர் ஸ்ப்ரே குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சுலபமான இரண்டு ஹேர் ஸ்ப்ரேவும் உங்களுடைய முடி வளர்ச்சியை அதிவிரைவாக தூண்டக்கூடியவை.

குறிப்பு 1:
முதலில் 1 கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். இந்த அரிசியில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறிய பின்பு தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு 12 மணி நேரம் அரிசி களைந்த தண்ணீரை புளிக்க விடுங்கள். அரிசி களைந்த தண்ணீர் நன்றாக புளித்து வந்தவுடன் அதில் 1 டேபிள் ஸ்பூன் கருப்பு நிற விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக குலுக்கி விடுங்கள். அதன் பின்பு இதை உங்களுடைய மயிர் கால்களில் படும்படி நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு, முடியின் நுனி பாகம் வரை ஸ்பிரே செய்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

குறிப்பு 2:
இந்த ஸ்ப்ரே கற்றாழை ஜெல்லை சேர்த்து செய்யக்கூடிய ஸ்பிரே. ஆகவே கற்றாழை ஜெல் நமக்கு கட்டாயம் தேவை. இயற்கையாக கிடைக்கும் கற்றாழை செடியிலிருந்து எடுத்த ஜெல்லாக இருந்தாலும் சரி, அல்லது கலர் மற்றும் வாசனை திரவியம் சேர்க்காத கடையில் இருந்து வாங்கிய ஜெல்லாக இருந்தாலும் சரி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் ஆலோவேரா ஜெல் 1 டேபிள் ஸ்பூன், 1/2 கப் அளவு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் பிளாக் கேஸ்டர் ஆயில், ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். தண்ணீர் அலோவேரா ஜெல், நாம் சேர்த்திருக்கும் எண்ணெய் எல்லாம் கலந்து ஒரு லிக்விட் ஆக நமக்கு கிடைத்திருக்கும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின்பு உங்களுடைய தலை லேசாக ஈரம் இருக்கும் போது இந்த ஸ்ப்ரேவை அடித்துக் கொண்டால், உங்களுடைய முடி வலிமையாக உதிராமல் இருப்பதோடு, பார்ப்பதற்கு சைனிங்காகவும் இருக்கும். முடி ட்ரை ஆகி உடைவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு ஸ்ப்ரே பாட்டிலையுமே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். ஒரு வாரத்திற்கு கெட்டுப்போகாது.

பின்குறிப்பு: சாதாரணமாக கிடைக்கும் மஞ்சள் நிற விளக்கெண்ணெயானது, பச்சையாக இருக்கக்கூடிய ஆமணக்கு கொட்டைகளை பயன்படுத்தி எடுப்பது. கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த விளக்கெண்ணெய் கொட்டைகளை வெயிலிலேயே நன்றாக காய வைத்து அதன் பின்பு எண்ணெய் எடுக்கப்படுகிறது. முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு 2 வகையான எண்ணெய்களுமே சிறந்தது தான். இருப்பினும் கொட்டைகளை காய வைத்து எடுக்கக்கூடிய எண்ணெயிலிருந்து சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. அதனால் தான் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய விளக்கெண்ணெயை குறிப்புக்கு பயன்படுத்து நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பிளாக் கேஸ்டர் ஆயில் கிடைக்கவில்லை என்றால், சாதாரண விளக்கு எண்ணெயை கூட குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -