இட்லி, தோசை, சப்பாத்தி, சிறுதானிய தோசைகளுக்கு தொட்டு சாப்பிட கருப்பு கொண்டை கடலை கிரேவி செய்வது எப்படி?

black-chenna-gravy
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, சிறுதானிய தோசைகளுக்கு தொட்டு சாப்பிட பெரும்பாலும் காலை நேரத்தில் சட்னி தான் அரைப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கருப்பு கொண்டை கடலையை வைத்து ஆரோக்கியம் தரும் சுவைத்தரும் சிம்பிளான கிரேவி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக எளிமையாக செய்யக்கூடிய இந்த கிரேவி அவ்வளவு சுவை நிறைந்தது. யாரும் ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. ஒரு முறை கட்டாயம் முயற்சி செய்து பார்க்கணும்.

செய்முறை

முதலில் 50 கிராம் அளவு கருப்பு கொண்டை கடலையை 8 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊறவைத்து குக்கரில் போட்டு மூன்றில் இருந்து நான்கு விசில் வைத்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி கொண்டைக்கடலைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு சிறிய பவுலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகப்பொடி, 1/4 ஸ்பூன் கரம் மசாலா, மஞ்சள் தூள் சிறிதளவு, இந்த மசாலா பொருட்களை எல்லாம் போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இதை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். திக்காக கரைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் பழுத்த பெரிய தக்காளி பழம் 1, போட்டு அதையும் விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன் தாளித்து, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா மசாலா கலவை, அதை இந்த எண்ணெயில் ஊற்றி ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு, வேக வைத்திருக்கும் கருப்பு சுண்டலை இதில் கொட்டி பச்சை மிளகாய் 2, பிரியாணி இலை 1, தேவையான அளவு உப்பு போட்டு, இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

நன்றாக கொதித்து மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது, இதன் மேலே கஸ்தூரி மேத்தி பொடி செய்து சிறிதளவு தூவி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, எலுமிச்சம்பழச் சாறு 1/2 ஸ்பூன் ஊற்றி கலந்து அடுப்பை அணைத்தால் சூப்பரான சென்னா கிரேவி தயார். இது ஒரு வித்தியாசமான ரெசிபி. சைடிஷ் ஆக தொட்டு சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: அட உளுந்து வடை நல்லா மொறு மொறு வர இது தான் சீக்ரெட்டா? இத மட்டும் தெரிஞ்சிட்டு வடை செஞ்சு பாருங்க, அப்புறம் வடை என்றால் இப்படித் தான் இருக்கணும்னு எல்லாரும் சொல்லுவாங்க.

பஞ்சாபி ஸ்டைல் சென்னா ரெசிபி என்று கூட இந்த கிரேவியை சொல்லுவார்கள். இதில் தக்காளி பழத்திலும் புளிப்பு, எலுமிச்சை பழச்சாறிலும் புளிப்பு அதிகமாகிவிட்டால், இறுதியாக ஒரு ஸ்பூன் வெல்லம் அல்லது சர்க்கரை தூவி இறக்கினால் சுவை பேலன்ஸ் ஆக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -