முகத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுதான் ஆண்களும் பெண்களும் நினைக்கிறார்கள். நம் வெளித்தோற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட வெளித்தோற்றத்தில் முதன்மையானதாக திகழ்வதுதான் முகம். அப்படிப்பட்ட முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்று பார்க்கும் பொழுது பலரும் அனுபவிக்க கூடிய பிரச்சினையாக திகழ்வதுதான் கரும்புள்ளி, மங்கு, பருக்கள் போன்ற பிரச்சனை. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு ஒரே ஒரு ஆரஞ்சு பழம் இருந்தால் போதும். எப்படி ஆரஞ்சு பழத்தை வைத்து மங்கு, கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குவது என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
மங்கு கரும்புள்ளிகள் நீங்க
இயற்கையாகவே பழங்களை நாம் அதிகமாக உண்பதன் மூலம் அந்த பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை நம்முடைய உடல் உட்கிரகித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அதேபோல்தான் இந்த பழங்களை நம்முடைய சருமத்திற்கும் நாம் பயன்படுத்தும் பொழுது அந்த பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை நம்முடைய சருமம் உட்கிரகித்து அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்து இளமையாகவும் ஆரோக்கியமான சருமமாகவும் மாறும். அந்த வகையில் நம்முடைய சருமத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு பழமாக திகழ்வதுதான் ஆரஞ்சு பழம்.
ஆரஞ்சு பழத்தை நாம் உண்பதன் மூலமும் ஆரஞ்சு பழ தோலின் பொடியை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலமும் நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆரஞ்சு பழத்துடன் நம் வீட்டில் இருக்கக்கூடிய தயிரை மட்டுமே பயன்படுத்தி இந்த முறையில் நாம் ஃபேஸ் பேக் போட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளும், மங்குகளும், பருக்களும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு நன்றாக புளித்த தயிர் தான் வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு புளித்த தயிர் எடுத்தோம் என்றால் மூன்று ஸ்பூன் அளவுக்கு ஆரஞ்சு பழ ஜூசை எடுக்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும். இதை சுத்தமான முகத்தில் நன்றாக தடவி 15லிருந்து 20 நிமிடம் உலர விட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய மங்குகளும், கரும்புள்ளிகளும் மறைய ஆரம்பிப்பதோடு பருக்களற்ற அழகான பொலிவான சருமத்தையும் நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:30 நாளில் முகம் வெள்ளையாக
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களையும் தொடர்ச்சியாக யார் ஒருவர் பயன்படுத்துகிறார்களோ அவர்களுடைய சருமத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. பொலிவான ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.