முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் ரிமூவ் செய்ய இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. செலவே இல்லாமல் முகம் பளபளப்பாக மாறிடும்.

nose4
- Advertisement -

மூக்குக்கு மேலே, தாடை பகுதியில், நெற்றியில் இருக்கக்கூடிய பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் நம்மளுடைய அழகை குறைத்து காட்டும். இதையெல்லாம் நீக்க வேண்டும் என்றால் பெரும்பாலும் பெண்கள் ஆண்கள் இருபாலருமே பியூட்டி பார்லருக்கு தான் இன்றைய சூழ்நிலைக்கு செல்கின்றோம். சில பேர் இந்த பிளாக் ஹெட்ஸ் ஒயிட் ஹெட்ஸ் இவைகளை நீக்க கடையிலிருந்து கிடைக்கும் ஸ்கிரப்பரை வாங்கி பயன்படுத்துவாங்க. ஆனாலும் ரிசல்ட் முழுமையாக கிடைக்காது. வீட்டில் இருந்தபடியே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க ஒரு சின்ன குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் இந்த கரும்புள்ளிகள் வெள்ளை புள்ளிகளை நீக்குவதற்கு முகத்தை நாம் நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். கொதிக்க கொதிக்க தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அந்த தண்ணீரில் இருந்து வெளிவரும் ஆவியில் உங்கள் முகத்தை காட்ட வேண்டும். போர்வையை போர்த்திக் கொண்டு ஜலதோஷம் பிடித்தால் ஆவி பிடிப்பது போல பத்து நிமிடங்கள் நன்றாக ஆவி பிடியுங்கள். அப்போது தான் அந்த பிளாக் ஹெட்ஸின் வேர்கால்கள் லூசாகும்.

- Advertisement -

பிறகு ஒரு சிறிய பவுலில் வெள்ளை சர்க்கரை 1 ஸ்பூன், மஞ்சள் – 2 சிட்டிகை, தேன் – 1 ஸ்பூன் சேர்த்து, இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து உங்களுடைய முகத்தில் தடவி லேசாக ஸ்கிரிப் செய்து கொடுக்க வேண்டும். (உங்களுடைய முகத்திற்கு எலுமிச்சை பழச்சாறு ஒத்துவரும் என்றால் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை இதில் ஊற்றிக் கொள்ளலாம்.) வெள்ளை சர்க்கரையை உங்களுக்கு பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால், நாட்டு சர்க்கரையை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

முகம் முழுவதும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம். குறிப்பாக மூக்குக்கு மேலே, நெற்றி பகுதி, தாடை பகுதி, இந்த இடங்களில் எல்லாம் இந்த பேக்கை போட்டு ஜென்டிலாக 5 நிமிடம் ஸ்கிரப் செய்து கொள்ளுங்கள். பல் தேய்க்கும் சாஃப்ட் பிரஷ் ஆக ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை முகத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்க்ரப் முகத்தில் இருக்கும் போதே அந்த பிரஷ்சை கொண்டு லேசாக தேய்த்துக் கொடுங்கள். மூக்கு பகுதி, மூக்குக்கு ஓரங்களில் இருக்கும் பகுதி, நெற்றி பகுதி என அதிகமாக பிளாக்ஹெட்ஸ் ஒயிட் ஹெட்ஸ் உள்ள இடத்திலும் இந்த பிரஷாலையே தேய்த்தால், அந்த பிளாக் ஹெட்ஸ் ஒயிட் ஹெட்ஸ் நன்றாக ரிமூவ் ஆகி வந்துவிடும்.

- Advertisement -

அப்படியும் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை எனும் பட்சத்தில், இந்த பிளாக் ஹெட்ஸை ரிமூவ் செய்வதற்கு சிறிய ஊசி போல டூல் ஒன்று கடைகளில் கிடைக்கின்றது. அது மலிவாக தான் இருக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு பிளாக் ஹெட்ஸ் உள்ள இடங்களில் எல்லாம் அழுத்தம் கொடுத்து எடுத்தால், அழகாக அங்கு இருக்கக்கூடிய பிளாக் ஹெட்ஸ் அனைத்தும் நீங்கி வந்துவிடும்.

பிறகு முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விடுங்கள். உங்களுடைய முகம் இப்போது ரொம்பவும் டயர்டாக இருக்கும். அதாவது சருமத்தை அழுத்தம் கொடுத்து சில பல வேலைகளை செய்துவிட்டு ஸ்கின்னில் இருக்கும் போர்ஸ் அனைத்தும் ஓபன் ஆகி இருக்கும். இதை திரும்பவும் கட்டாயம் மூடிவிட வேண்டும். ஒரு ஐஸ் கியூபை மெல்லிசான காட்டன் கைக்குட்டையில் வைத்து முகம் முழுவதும் லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுங்கள்.

குறிப்பாக எந்த இடத்தில் இருந்து நீங்கள் பிளாக்ஹெட்சை அதிகமாக ரிமூவ் செய்தீர்களோ, அந்த இடத்தில் ஐஸ் க்யூப் மசாஜ் கொடுக்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்களுடைய முகத்தில் ஒரு தனி பொலிவு கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் மட்டும் இப்படி செய்ய வேண்டும். அடிக்கடி முகத்தை போட்டு ஸ்கிரப் செய்யக்கூடாது. முகம் சீக்கிரம் சுருங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்த ரெமிடி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -