உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே, மூக்கின் மீது உள்ள கரும்புள்ளி, வெண் புள்ளிகளை ஒரே வாரத்தில் நீக்கி விடலாம்.

nose3
- Advertisement -

இப்போதெல்லாம் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்பது பெருகிக்கொண்டே போகிறது. அதுவும் மூக்கின் மேல் தோன்றும் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் இருந்தால், நீங்கள் என்ன தான் முகத்தை அழகுபடுத்தி கொண்டாலும் சிறிது நேரத்திற்கெல்லாம் முகம் பொலிவிழந்து விடும். இதற்கு முக்கியமான காரணம் உணவு பழக்க வழக்கங்கள் தான். இதை நாம் சரியான முறையில் கையாண்டாலே போதும். முகம் சார்ந்த பிரச்சனைகள் மட்டும் இல்லாமல் உடலிலை பாதிக்கும் பிரச்சனைகளை கூட சரி செய்து விடலாம்.

அதற்கு, நம் உடலுக்கு தேவையான நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், தேவையான தண்ணீர், உடற்பயிற்சி, சரியான உறக்கம், வெளியில் சென்று வந்தாலும் முகத்தை அலம்புவது, போன்றவைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக உணவு பழக்கத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும்.

- Advertisement -

ஏன் என்றால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் வெண்புள்ளிகள் தோன்ற நாம் உடலில் சேரும் கொழுப்பு தன்மை தான் முதல் காரணம். அதை குறைக்க வேண்டும் என்றால், சமையலில் அதிக எண்ணெய் சேர்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை நாம் அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். சரி இந்த கரும்புள்ளி, வெண்புள்ளிகள் மறைய நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே, எப்படி இதற்கான தீர்வை எளிய முறையில் செய்யலாம் என்பதற்கான பதிவுதான் இது.

இந்த பேக் போடுவதற்கு நாம் மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும். முதலில் சுடுதண்ணீரில் முகத்தை நன்றாக ஆவி பிடித்து கொள்ளுங்கள். இப்படி செய்வதின் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் எல்லாம் வெளியேறி விடும். இதை நாம் சாதாரணமாக நேரம் கிடைக்கும் போதுதெல்லாம் செய்யலாம்.

- Advertisement -

இரண்டாவது ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். அதில் சர்க்கரையை தொட்டு நம் முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளிகள் இருக்கும் இடங்களில் எல்லாம் நன்றாக ஒரு ஐந்து நிமிடம் தேய்த்து விட வேண்டும். அதன் பிறகு சுடுதண்ணீரில் முகம் கழுவ வேண்டும். இதற்கு பிறகு ஒரு காட்டன் துணியோ, அல்லது டவலோ வைத்து முகத்தை அழுத்தி துடைக்க வேண்டும். இது நாம் போடும் பேக் முகத்திற்கு உள்ளே செல்ல உதவி செய்யும்.

மூன்றாவதாக ஒரு பவுலில் கடலை மாவு 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன், சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையை தூள் செய்து அதில் 1/2 டீஸ்பூன், இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பேக் போல போட்டு, ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து தண்ணீரில் முகம் கழுவி விடுங்கள்.

இதை ஒரு நாள் மட்டும் செய்த பின் விட்டு விட கூடாது. இதே போல தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். அப்போது தான் மூக்கின் மேல் உள்ள கரும் புள்ளிகள், வெண் புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -