சனி தோஷம் நீங்கி, சனி பகவான் அருள் பெறுவதற்கான வழி !

Sani-bagavan

பக்தர்களுக்கு அதிசயமான பலன்களை அளிக்கக் கூடியவர் சனிஸ்வர பகவான். சனிபகவான் விஸ்வகர்மாவின் மகள் நீலாதேவியைத் மணந்து கொண்டார். தவிர ஜேஸ்டா தேவி மந்தா தேவி என்று இரு மனைவிகள் உண்டு. குளிகன் இவருடைய மகன்.

ஒவ்வொரு நாளும் குளிகனுக்குரிய நேரத்தில் நல்லதோ கெட்டதோ எந்த காரியம்  செய்தாலும் அது வெற்றி அடையும். அதனால் தான் இறந்தவர்கள் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க குளிகன் உள்ள நேரத்தில் செல்ல மாட்டார்கள். சனி வாதம் பித்தம் கபம் என்ற மூன்றில் வாதம் இவர். தாமசகுணத்தோன். ஆண்-பெண் அலி என்ற பிரிவில் அலியாவார்.

அந்த அலியிலும் ஆண் அலி இவர். பஞ்ச பூதங்களில் காற்று நால்வகை உபாயங்களில் பேத உபாயத்திற்கு உரியவர். பாபக்கிரக வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த இவர் மேற்கு திசைக்கு உரியவர். நீலன் மந்தன் காரிமுதுமகன் சௌரி அந்தகன் காரியாவன் மூடவன் குள்ளன் என்று பல பெயர்கள் இவருக்கு உண்டு.

சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர். குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000மைல். சனி கிரகம் பூமிக்கு சாம்பல் நிறமான கதிர்களை அனுப்பி கொண்டு இருக்கிறது.

shani-bagavaan

- Advertisement -

ஆகையால் ஆடை வகைகளில் சாம்பல் நிற ஆடைகளை பயன்படுத்தினால் சனி பாதிப்புகள் நீங்கி சனியின் அருள் பெறலாம். உணவு வகைகளில் இரும்பு சத்துள்ள பழ வகைகள் சாப்பிடலாம். பேரிச்சம் பழம், பலாப்பழம், நாவல் பழம், காய்கறி வகைகளில் சுண்டைக்காய், பீட்ரூட், வெள்ளை பூசணி, (அதிக எணர்ஜி) கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு, அனைத்து கீரை வகைகள் குறிப்பாக முருங்கைக் கீரை சாப்பிடலாம்.

சனிபகவானுக்கு விசேஷமான ரத்தினமாக நீலம் கருதப்படுகிறது. இதில் இந்திர நீலம் மிகவும் உயர்ந்தது. இந்த கல்லை அணிபவர்களுக்கு ஆயுள் செல்வம் அதிக அளவு சேரும். மேலும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தசை தோல் எலும்பு போன்ற உறுப்புகளில் உள்ள கோளாறை நீக்கி நலத்தைக் கொடுக்கக் கூடியது.

shani-temple

இவற்றுக்கு மேலாக கண்பார்வையற்றவர், ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல், ஜீவ ராசிகளுக்கு விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும், உணவு இடுதல் போன்றவற்றை செய்து வந்தால் சனியின் பரிபூரண கருணையை பெறலாம். சனி தவம் செய்தே சனீஸ்வரன் ஆனார்.

ஆகையால் சனி கிரகத்தை நட்பு உணர்வோடு கலந்து இடைவிடாமல் தியானம் செய்வோருக்கு நிச்சயமாக நலன்கள் உண்டாகும். தொழில் துறையில் அதிக பணம் ஈட்ட நினைப்பவர்கள் கங்கா நதி முதல் இமயம் வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கலாம். சனி ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி மேற்குத் திசைகளில் வசிக்கலாம், வீடுகள் கட்டலாம்.

சனி தோஷம் நீங்க,” ஸ்ரீறும் றும்” என்று மந்திரம் ஜெபித்தால் சனி தோஷம் நீங்கும். பலவிதக் கொடுமைகளுக்கும் காரணபூதனாக உள்ள சனியை வழிபட்டுப் போற்றினால் குறையாத வயது குன்றாத வளமும் நலனும் வற்றாத செல்வமும் கிடைக்கும். சனீஸ்வரனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சந்தோஷமாக வாழ்வோம்.