நம் ப்ளட் குரூப்பை வைத்தே நாம் எப்படிப்பட்டவர் என்பதை துல்லியமாக சொல்லிவிட முடியுமா என்ன? 100% ஆச்சரியப்பட்டு போவீர்கள்!

blood-group-astrology_tamil
- Advertisement -

பல நாடுகளில் பல விஷயங்களை நம்பி முடிவெடுப்பது உண்டு. அந்த வகையில் ஜப்பான், கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இன்றளவிலும் ஒருவருடைய பிளட் குரூப்பை வைத்து அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய திறமைகள் என்னென்ன? குணாதிசயங்கள் என்னென்ன? என்பதை கணிக்கின்றனர். அதை வைத்தே வேலை வாய்ப்பிலும், திருமணம் போன்ற முக்கிய விஷயங்களிலும் முடிவெடுப்பது உண்டு. நம்முடைய ரத்த வகையை வைத்து நம் குணாதிசயங்களையும், திறமைகளையும் அறிந்து கொள்வது எப்படி? என்பதை தான் இந்த பொது பலன் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ரத்த வகைகளில் பிரதானமாக நான்கு வகையான இரத்த வகைகள் உண்டு. அதில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இருக்கின்றன. இவற்றில் முதல் ரத்த வகை ‘O’ குரூப் ரத்த வகை ஆகும். அடுத்ததாக A, B, AB என்று தொடர்ந்து வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த நான்கு பிரிவுகளில் நீங்கள் எந்த பிரிவினர்? என்பதை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

O Blood Group:
நீங்கள் ‘O’ குரூப் இரத்த வகை என்றால் உங்களுக்கு காலரா மற்றும் அல்சர் போன்ற வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வகை ரத்தத்தை தான் கொசுக்களும் அதிகம் விரும்பி குடிக்கின்றன. நேர்மையும், விடாமுயற்சியும் இவர்களிடம் இருப்பதால் எந்த ஒரு பொறுப்பையும் நம்பி ஒப்படைக்கலாம்.

இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுதும் இவர்களிடம் இருக்கும். நெருங்கியவர்களிடம் எந்த ஒரு ரகசியத்தையும் இவர்கள் வெளிப்படையாக பேசி விடுவார்கள். தனக்குள் ரகசியங்களை புதைத்துக் கொள்ள விரும்பாதவர்கள், இதனால் மனம் விட்டு பேச நண்பர்கள் இல்லை எனில் மனம் உடைந்து தனிமையில் தவிப்பார்கள்.

- Advertisement -

புதிய புதிய சிந்தனைகள் உதித்தாலும், அவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதனால் இவர்களுடைய திறமைகள் பெரும்பாலும் வீணடிக்கப்படுகின்றன. என்னதான் இவர்களிடம் நற்குணங்கள் இருந்தாலும் கொஞ்சம் சுயநலமும் கொண்டவர்கள் இருப்பினும் தன்னை நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்திய மக்கள் தொகையில் 48% பேருக்கு இந்த ரத்த வகை தான் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

A Blood Group:
நீங்கள் ‘A’ குரூப் இரத்த வகையை சார்ந்தவராக இருந்தால் கற்பனை வளம் உங்களிடம் அதிகரித்து காணப்படும். திறமையும், புத்தி கூர்மையும், பொறுப்புணர்வும் உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள். பேச்சில் ஒரே மாதிரியான குணாதிசயத்தை கொண்டவர்கள். இவர்கள். முன்பு ஒரு பேச்சு இப்பொழுது ஒரு பேச்சு என்று மாற்றி மாற்றி பேச மாட்டார்கள்.

- Advertisement -

ஒரு விஷயம் இவர்களுக்கு பிடித்து விட்டால் அதை எப்படியாவது போராடி அடைய வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இருப்பார்கள். தன்னை நம்பியவர்களிடம் விசுவாசத்துடனும், உண்மையாகவும் இருக்க கூடியவர்கள். எந்த ஒரு விதிகளையும் இவர்கள் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். இத்தனை நற்குணங்களை கொண்டிருந்தாலும், இவர்கள் ரொம்பவும் சென்சிடிவ்வானவர்கள். தனக்கானவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தால், அதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

மன இறுக்கத்தை உண்டாக்கக்கூடிய ஹார்மோன்கள் மற்ற ரத்த வகையினரை காட்டிலும் உங்களுக்கு அதிகம் சுரக்கும் என்பதால் அடிக்கடி ஸ்ட்ரெஸ் ஆவீர்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பது போல், மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் டென்ஷன் ஆவார்கள். இந்திய மக்கள் தொகையில் 38% பேர் இந்த ரத்த வகையை சார்ந்தவர்கள் என்பதால் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

B Blood Group:
மற்ற ரத்த வகையினரை காட்டிலும் ‘B’ குரூப் ரத்த வகையை சார்ந்தவர்களுக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உடலில் இருக்குமாம். இதனால் அவர்களுடைய உடல் இயல்பாகவே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். பெரும்பாலும் இவர்கள் அழகாகவும், மற்றவர்களை கவரும் வண்ணமும் உடல்வாகையும், முக அழகையும் பெற்றிருப்பார்கள்.

புதுமையான சிந்தனைகளும், அறிவாற்றலும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். மேலும் இவர்களுடைய பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால், எளிதில் மற்றவர்களை மயக்கி விடுவார்கள். தன்னையும், சுற்றி இருப்பவர்களையும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள்.

தனக்கு பிடித்த விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள், இதனால் மற்றவர்கள் பார்வையில் பொறுப்பற்றவர்களாக தெரிவார்கள். இத்தகைய நற்குணங்களை கொண்டிருந்தாலும், இவர்களும் கொஞ்சம் சுயநலக்காரர்கள் தான். இவர்களை மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இந்திய மக்கள் தொகையில் 10% பேர் இந்த ரத்த வகையினர் ஆவர்.

இதையும் படிக்கலாமே:
இந்த 5 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் வெற்றி தானாம் தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கான்னு பாத்துக்கோங்க!

AB Blood Group:
‘AB’ பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் A மற்றும் B பிளட் குரூப் வகையை சேர்ந்தவர்களின் குணாதிசயங்களோடு கலந்து இருப்பார்கள். வெவ்வேறு குண நலன்களை கொண்டதால் இவர்களை மற்றவர்கள் புரிந்து கொள்வது என்பது கடினமானதாக இருக்கும்.

சுய கௌரவம் அதிகம் பார்ப்பவர்கள் எனவே தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்க இவர்கள் விரும்புவது கிடையாது. எந்த ஒரு விஷயத்திலும் ஆழமாக சிந்தித்து ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். தன் வாழ்க்கையில் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் சுய முடிவாக இருப்பதை இவர்கள் விரும்புகிறார்கள் எனவே மற்றவர்களை இவர்களுடைய வாழ்க்கைக்குள் எளிதில் அனுமதிப்பதில்லை.

சுய கட்டுப்பாடு இவர்களிடம் அதிகரித்து காணப்படும். வித்தியாசமான குண நலன்களை கொண்ட இவர்களுக்கு அதிக மறதி இருக்கும். மற்ற ரத்த வகையினரை காட்டிலும் இவர்களுக்கு வயதாக ஆக முக்கிய விஷயங்களில் மறதி அதிகம் இருக்கும். இதனால் இவர்களும் பொறுப்பற்றவர்களாக மற்றவர்கள் கண்களுக்கு தெரிவார்கள். இந்திய மக்கள் தொகையில் வெறும் 3% மட்டுமே இந்த ரத்த வகையை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -