உடல் சூட்டினை உடனடியாக 2 நிமிடத்தில் குறைக்க, சூப்பரான சுலபமான டிப்ஸ்!

body-heat
- Advertisement -

வெயில் காலங்களில் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை தான் இந்த உடல் சூடு. உடல் சூடு அதிகமாகும் பட்சத்தில் நமக்கு வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, உடல் உஷ்ணம், கண் எரிச்சல், கண் பொங்கி வருவது போல் இருப்பது போன்ற பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு இயற்கையான முறையில் என்ன வழி உள்ளது என்பதை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

villakennai

உடல் சூட்டை உடனடியாக குறைப்பதற்கு உடனடி தீர்வு கொடுக்கும் பொருள் என்றால் அது விளக்கெண்ணெய். மரச்செக்கு விளக்கெண்ணெய் வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உடல் சூடு எப்போது அதிகமாக இருக்கின்றதோ அதிகப்படியான உடல் உஷ்ணத்தினால் அவதிப்பட்டு வருகிறீர்களோ, அந்த சமயம் இரண்டு சொட்டு விளக்கெண்ணெயை உங்களுடைய இரண்டு கை ஆட்காட்டி விரலில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய இரண்டு காலில் இருக்கும் கட்டை விரலின் நகத்தில் மேல் இந்த விளக்கெண்ணையை நன்றாக தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன்பின்பு ஒரு காட்டன் துணியை வைத்து அந்த விளக்கெண்ணையை நகத்திலிருந்து துடைத்து விடுங்கள். இல்லை என்றால் உடல் அதிக குளிர்ச்சியாகி விடும். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுடைய உடலில் இருக்கும் சூடு உடனடியாக தணியும்.

kattaiviral

குழந்தைகளுக்கு வயிற்று வலி வரும் சமயங்களில் இந்த விளக்கெண்ணையை நம்முடைய முன்னோர்கள் தொப்புளில் தடவ சொல்லுவார்கள். இப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு சூட்டினால் எடுக்கக்கூடிய வயிற்றுவலி உடனே தணியும்.

- Advertisement -

நிறைய பேர் வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் உடலை குளிரச் செய்வதற்காக ஜில்லுனு இருக்கக்கூடிய ஐஸ் வாட்டரை பிரிட்ஜில் இருந்து எடுத்து குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இது உடலுக்கு அதிகப்படியான கெடுதலை கொடுக்கும். இப்படி குளிர்ந்த தண்ணீரை தவிர்த்து விட்டு சூடாக இருக்கும் வெந்நீரை ஒரு டம்ளர் அளவு குளிக்கும் பட்சத்தில் நம் உடலில் இருக்கும் சூடு உடனே தணியும்.

kattaiviral1

இதோடு மட்டுமல்லாமல் வெயிலில் உங்களுக்கு இயற்கையாகக் கிடைக்கக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டு வந்தாலும் உடல் அதிகமாக சூடாகாமல் இருக்கும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய வியாதிகள் அவ்வளவு சுலபமாக நம்மை தாக்காது. தண்ணீர் அதிகமாக குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக சூடாக இருக்கும் டீ காபியை தவிர்ப்பது வெயில் காலங்களில் நமக்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. முயற்சி செய்து பாருங்கள் மேல் சொன்ன இந்த குறிப்புகள் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் இருக்கும்.

- Advertisement -