15/1/2023 தைத்திருநாள் அன்று சூரிய பகவானுக்கு இதை செய்ய தவறாதீர்கள்! சர்க்கரை பொங்கலை போல இனிப்பான வாழ்விற்கு பொங்கலில் செய்ய வேண்டியது என்ன?

pongal-surya-bagavan
- Advertisement -

தமிழர்களின் மரபில் முக்கிய தினமான தைத்திருநாள், பொங்கல் என்றும் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும் நாடு முழுவதுமே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயம் செழிக்கவும், வசதி வாய்ப்புகள் பெருகவும் தமிழர்கள் தொன்று தொட்டு சூரிய பகவானை வழிபட்டு வரும் ஒரு முக்கிய விழாவாக இவ்விழா அமைய பெற்றுள்ளது. இந்நாளில் சூரியனுக்கு தவறாமல் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இதனால் உண்டாக கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் ஆன்மீக குறிப்பு தகவல்களாக இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மார்கழி மாதத்தின் இறுதியில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் இருக்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீடு முழுவதும் சுத்தம் செய்து வெள்ளை அடித்து கோவில் போல அலங்கரித்து மறுநாள் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

- Advertisement -

சர்க்கரை பொங்கல் படைக்கும் பொழுது அதில் வெல்லம் சேர்ப்பது சூரியனுக்கு நாம் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரமாகவே இருக்கிறது. இந்த வெல்லம் கரைத்த தண்ணீரை சூரியனுக்கு நைவேத்தியம் படையுங்கள். நீங்கள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து சுத்த பத்தமாக சூரியனைத் தான் முதலில் அன்றைய தினம் வழிபட வேண்டும். சூரிய பகவான் கோவிலுக்கு சென்று சூரியனுடைய சன்னதியில் ஐந்து விதமான சிவப்பு நிறம் கொண்ட மலர்களை சாற்ற வேண்டும்.

பின்னர் கிரக தோஷங்கள் நீங்கவும், வாழ்க்கையில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வு வளமுடன், வறுமை இல்லாமல் இருக்க சூரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். இதனால் உடல், மனம், கண், எலும்பு தொடர்பான எல்லா விதமான பிரச்சனைகளும் நீங்கும். சூரிய பகவானை பார்த்து பூமியில் நைவேத்தியம் படைக்கும் பொழுது ஒரு செம்பு பாத்திரத்தில் பால் கலந்து சூரியனை வணங்கி நிலத்தில் அதை சிறிதளவு விட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும், முயற்சிகள் தடையில்லாமல் பலிதமாகும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

பொதுவாக சூரிய பகவானை வேண்டி சர்க்கரை பொங்கல் வைக்கும் பொழுது அளவிற்கு அதிகமாக வைத்து விடுவது உண்டு. அதை வீணாக சிலர் குப்பையில் மறுநாள் கொட்டுவதை பார்த்திருப்போம். இது போல நீங்கள் கண்டிப்பாக இம்முறை செய்யவே கூடாது. சரியான அளவில் பொங்கல் வைத்து ருசியாக படைத்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். சாதத்தை வீணடிக்காதீர்கள். இது தோஷத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
நாளை மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை! ஒரே ஒரு மாவிலை கிடைத்தால் போதும். உங்கள் குடும்பம் சீரோடும் சிறப்போடும் செல்வ செழிப்போடு வாழ முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

மேலும் உங்களால் முடிந்த அளவிற்கு அன்றைய தினத்தில் சூரியன் மறைவதற்குள் ஏழை எளியவர்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ, வஸ்திரமாகவோ தானம் செய்யுங்கள். முடிந்தால் அன்னதானம் ஆவது செய்யுங்கள் மேலும் தானம் செய்ய வேண்டிய பொருட்களில் கோதுமை, கொள்ளு, பச்சரிசி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை நீங்கள் தானம் செய்வதால் சூரிய பகவானுடைய அருள் பரிபூரணமாக கிடைக்குமாம். தைத்திருநாள் அன்று நீங்கள் வைக்கும் சர்க்கரை பொங்கல் போல இனிப்பான வாழ்க்கை உங்களுக்கு அமைய சூரியனுக்கு இந்த விஷயங்களை செய்ய மறக்காமல் செய்து அவருடைய அருளை பரிபூரணமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -