இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு பாம்பே சட்னி செய்வது எப்படி? சமையலே தெரியாதவர்கள் கூட, ஐந்தே நிமிடத்தில் இதை மணக்க மணக்க சூப்பராக செய்து முடிக்கலாம்.

chutney3
- Advertisement -

சமைக்கத் தெரியாதவங்க, புதுசா சமைக்க பழகுறவங்க, ரூமில் தங்கி படிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்ஸ் என்று எல்லோராலும் செய்யக்கூடிய சுலபமான ஒரு சைட் டிஷ் தான் இந்த பாம்பே சட்னி. இதை சில பேர் பாம்பே கடல் என்றும் சொல்லுவார்கள். இதை செய்தால் பெரிய அளவில் சுவை இருக்காது. சுமாரான டேஸ்ட் தான் இருக்கும். ஆனால் இந்த மெத்தடை ட்ரை பண்ணி, இந்த கடலை மாவு சட்னியை செய்து பாருங்களேன். சூப்பரான சுவையில் வரும். குறிப்பா பூரி சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கணும்னு சொல்லலாம். வாங்க நேரத்தை கலக்காமல் ரெசிபியை பார்க்கலாம்.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவு கடலைமாவை போட்டு வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் இதை வறுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள். இதை கட்டிகள் இல்லாமல் கரைக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல், கட்டியாக இதை கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி இதை நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். காரணம் இதை கடாயில் ஊற்றி சூடு செய்யும் போது டக்குனு திக்காக மாறும். ஆகவே, எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த தண்ணீரை இப்போதே ஊற்றி கரைத்து இந்த மாவை தனியாக வைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, தாளிக்க வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கைப்பிடி அளவு, போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 4, வரமிளகாய் கிள்ளியது 2, இஞ்சி துருவல் 1/2 ஸ்பூன், கருவேப்பிலை 2 கொத்து போட்டு நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அடுத்து நறுக்கிய மீடியம் சைஸில் இருக்கும் பழுத்த தக்காளி பழம் 1, போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், போட்டு வதக்க வேண்டும். தக்காளிப்பழம் சூப்பராக வெந்து வதங்கி நமக்கு கிடைத்து விடும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இதை எல்லாம் வதக்கி விடுங்கள்.

தக்காளி பழம் நன்றாக வதங்கி வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை இந்த கடாயில் இருக்கும் தாளிப்பில் ஊற்ற வேண்டும். ஊற்றிவிட்டு உடனடியாக ஒரு கரண்டியை வைத்து கலந்து விடுங்கள். ஏனென்றால் இந்த சட்னி உடனடியாக திக்காக தொடங்கிவிடும். ஆகவே எவ்வளவு தண்ணீர் தேவையோ முதலிலேயே இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். சட்னி ரொம்பவும் திக்காக இருந்தால் தொட்டு சாப்பிட சுவையாக இருக்காது.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் மைசூர் பருப்பு இருந்தா போதும் 10 நிமிஷத்துல சுவையான மொறு மொறு தோசை தயார். ஒரு முறை இந்த தோசை சாப்டீங்கனா இதுக்கப் புறம் இது தான் உங்க ஃபேவரிட் தோசையா இருக்கும்.

கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை தாளிப்பில் கொட்டியவுடன் 3 நிமிடம் வரை கடலை மாவு கொதித்தால் போதும். இறுதியாக மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு தூவி, அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான பாம்பே சட்னி தயார். கூடுமானவரை இதை சுடச்சுட இருக்கும்போதே சாப்பிட்டு விடுங்கள். ஆறிவிட்டால் இன்னும் கொஞ்சம் கட்டியாகி, சுவை குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -