- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரு கப் மைசூர் பருப்பு இருந்தா போதும் 10 நிமிஷத்துல சுவையான மொறு மொறு தோசை...

ஒரு கப் மைசூர் பருப்பு இருந்தா போதும் 10 நிமிஷத்துல சுவையான மொறு மொறு தோசை தயார். ஒரு முறை இந்த தோசை சாப்டீங்கனா இதுக்கப் புறம் இது தான் உங்க ஃபேவரிட் தோசையா இருக்கும்.

- Advertisement -

என்ன தான் பலதரப்பட்ட டிபன் வகைகள் இருந்தாலுமே கூட எப்பொழுதும் நமக்கு ஃபேவரிட் என்று சொன்னால் அது தோசை தான். இந்த தோசையை சாப்பிட வேண்டும் என்றால் அரிசி ஊற வைத்து மாவரைத்து தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பழைய நிலை. இப்பொழுது நினைத்த உடனே மாவு கிடைத்தாலுமே கூட, இன்னும் சுலபமாகவும் கொஞ்சம் வித்தியாசமாகவும் தோசை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தோசை ரெசிபி முயற்சி செய்து பார்க்கலாம்.

தோசை வகைகள் பல வந்து விட்டது உடனடியாக செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் தோசை வகைகளையே இப்போது எண்ணற்ற வகைளில் உள்ளது. அந்த வகையில் நாம் தோசை செய்ய வேண்டும் என்றால் இது வரை துவரம் பருப்பு சிறு பருப்பு என அனைத்திலும் செய்திருக்கிறோம். இந்த சமையல் குறிப்பு பதிவில் மைசூர் பருப்பை வைத்து ரொம்பவே வித்தியாசமான ஒரு தோசை ரெசிபி எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

மைசூர் பருப்பு – 1 கப், கேரட் -2 காய்ந்த மிளகாய் -5, சீரகம் – 1ஸ்பூன் கருவேப்பிலை – 1கொத்து, பெரிய -1வெங்காயம் பொடியாக நறுக்கியது, உப்பு -1/4 டீஸ்பூன்.

செய்முறை

இந்த தோசை செய்ய முதலில் பருப்பை இரண்டு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முழு கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி அதையும் இந்த பருப்புடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் சீரகம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து இந்த மாவை ஒரு பவுலில் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் நன்றாக கலந்த பிறகு கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து பின் தட்டு போட்டு 10 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். இந்த நேரத்தில் உள்ளாகவே மாவு நன்றாக ஊறி விடும்.

இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் மாவை எடுத்து நீங்கள் எப்பொழுதும் ஊற்றும் தோசை போல நல்ல மெலிதாகவே ஊற்றிக் கொள்ளலாம். இதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை இருந்தால் அதையும் கொஞ்சம் பொடியாக நறுக்கி மேலே தூவி சுட்டால் தோசை மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வெங்காயம் குடை மிளகாய் இருந்தா சப்பாத்திக்கு ரொம்பவே சிம்பிளான இந்த சைடுடிஷ்டை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. டேஸ்ட் சும்மா வேற லெவல் இருக்கும்.

இது போல வெங்காயம் சேர்த்து ஊற்ற பிடிக்கவில்லை என்றால் வெறும் தோசையாக ஊற்றி கூட சாப்பிடலாம். இதற்கு எந்த வகையான சட்னி, சாம்பார் இருந்தாலுமே சாப்பிட பிரமாதமாக இருக்கும். இந்த மைசூர் பருப்பு தோசை ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் இன்றே இதை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்