- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாலையில் எழுந்ததும் கூற வேண்டிய மந்திரம்

காலையில் எழுந்ததும் கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்கும் பொழுது அந்த நாள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும், எந்தவித பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது, சிறப்பான நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் எழுந்து கொள்வோம். ஆனால் அன்றைய தினம் நடக்கும் சம்பவங்களோ வேறுவிதமாக இருக்கும். பலருக்கும் அவர்கள் நியமித்தது போல் அன்றைய தினம் என்பது நடக்காது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த காரணங்களை சரி செய்வதற்கும் நினைத்தது போலவே அன்றைய தினம் முழுவதும் நமக்கு நன்மையாக நடைபெறுவதற்கும் எந்த மந்திரத்தை கூறி எழுந்துக் கொள்ள வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பூமா தேவி வழிபாடு

இந்த பூமியை நாம் பூமாதேவியாக வழிபாடு செய்கிறோம். எந்த அளவிற்கு அனைவரும் பூமாதேவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது தெரிவதில்லை. பொதுவாக பூமாதேவி என்பவள் பொறுமையின் சிகரமாக திகழக்கூடியவர். அப்படிப்பட்டவரை நாம் என்னதான் கஷ்டப்படுத்தினாலும் அவள் மிகவும் அமைதியுடன் தன் பிள்ளை தன்னை மிதித்ததாக நினைத்து நம்மை தாங்கி நிற்கிறாள். அப்படிப்பட்ட தெய்வத்தை நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட தெய்வத்திற்குரிய மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக காலையில் நாம் எழுந்த உடனேயே நம்முடைய உள்ளங்கைகளை பார்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். காரணம் நம்முடைய கையில் மகாலட்சுமி தாயார் என்பவர் வீற்றிருக்கிறார் என்பது ஐதீகம். இதற்கு ஒரு ஸ்லோகம் கூட உள்ளது. அதில் நம்முடைய விரலின் நுனிப்பகுதியில் மகாலட்சுமியும் கையின் மத்திய பகுதியில் சரஸ்வதி தேவியும் கையின் அடிப்பகுதியில் கௌரி தேவியின் வீற்றிருக்கிறார் என்று பொருள்படும் அளவிற்கு கூறப்பட்டிருக்கும்.

இன்னும் சிலரோ கையின் அடிப்பகுதியில் மகாவிஷ்ணு வீற்றிருப்பதாக கூறுவார்கள். எப்படி இருந்தாலும் கையின் நுனிப்பகுதியில் மகாலட்சுமி தாயார் மத்திய பகுதியில் சரஸ்வதி தேவியும் இருப்பது என்பது உறுதியாகிவிட்டது. இது மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு உதவும். இந்த பூமியில் நம்முடைய காலை வைத்து மிதிப்பதற்கு முன்பாக பூமாதேவியை மனதார நினைத்துக் கொண்டு ஒரு மந்திரத்தை நாம் கூறினோம் என்றால் அன்றைய தினம் முழுவதும் நமக்கு வெற்றிகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்மமே!!

இந்த மந்திரத்திற்கு உரிய அர்த்தம் என்னவென்றால் சமுத்திரத்தை ஆடையாக உடுத்திய பூமாதேவியே என் பாதத்தை உன் மீது வைத்து எழுந்து கொள்கிறேன் என்னை மன்னித்து எனக்கு அருள் புரிவாயாக. இப்படி நாம் தினமும் காலையில் நம்முடைய பாதத்தை பூமியில் வைப்பதற்கு முன்பாக பூமாதேவியை மதித்து பூமாதேவியை நினைத்து மன்னிப்பு கேட்டு பூமாதேவியை தொட்டு வணங்கிய பிறகு அன்றைய நாளை ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் பூமாதேவியின் அருளால் நமக்கு அன்றைய நாள் முழுவதும் சிறப்பான நாளாக அமையும். இதை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் கூறலாம். தொடர்ச்சியாக கூறிக் கொண்டே வரும்பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இதையும் படிக்கலாம: அதி தேவதை வழிபாடு

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை பொருள் உணர்ந்து கூறுவதன் மூலம் பூமா தேவியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து தினமும் நமக்கு வெற்றிகரமான நாளாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்