- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரம்ம முகூர்த்த தீப ரகசியம்

பிரம்ம முகூர்த்த தீப ரகசியம்

- Advertisement -

பலரும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபாடு செய்தால் வாழ்க்கையை சுபிட்சம் ஆகும் என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். இன்னும் சிலரோ பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கோ இப்படி தீபம் ஏற்றியும் அவர்கள் நினைத்த காரியம் நடக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எந்த முறையில் தீபமேற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பிரம்ம முகூர்த்த தீப ரகசியம்

தெய்வத்தை வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு செயல் என்றால் அது தீபம் ஏற்றுவது தான். தீபத்தில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்றும் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அந்த தீபத்தில் நாம் அமரச் செய்யலாம் என்றும் பலருக்கும் தெரியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் காலையிலும் மாலையிலும் எரிவதன் மூலம் லட்சுமி கடாட்சம் என்பது உண்டாகும். அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறக்கூடிய 3:30 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் தீபம் ஏற்றி நாம் வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான காரியங்களைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

எந்த ஒரு தீபத்தை நாம் ஏற்றுவதாக இருந்தாலும் அந்த தீபத்தில் ஒரு சிறிய தங்க நாணயம், ஒரு சிறிய வெள்ளி நாணயம், ஒரு சிறிய செம்பு நாணயம் இவை மூன்றையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்று கூறப்படுகிறது. வாரம் ஒரு முறை விளக்கை சுத்தம் செய்யும் பொழுது இந்த மூன்று நாணயங்களையும் சுத்தம் செய்து மறுபடியும் விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாணயத்திற்கு பதிலாக நகைகளாக இருந்தாலும் போட்டு தீபம் ஏற்றலாம். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் இவற்றை போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நாம் தீபம் ஏற்றும் பொழுது பின்வரும் இந்த ஸ்லோகத்தை முழுமனதோடு ஆத்மார்த்தமாக சொல்லி தீபம் ஏற்றினோம் என்றால் அந்த தீபத்திற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். மேலும் நாம் எதை நினைத்து தீபம் ஏற்றுகிறோமோ அவை அனைத்தும் கிடைக்கும். எதையுமே நினைக்காமல் கூட இந்த ஒரு ஸ்லோகத்தை சொல்லி நாம் தீபம் ஏற்றினோம் என்றால் நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதெல்லாம் நாம் தீபம் ஏற்றுகிறோமோ, எத்தனை தீபம் ஏற்றுகிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த ஸ்லோகத்தை கூறி தீபம் ஏற்றும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

ஸ்லோகம்

“சுபம் பவது கல்யாணம்
ஆரோக்கியம் தன சம்பதாம்
சத்ரு புத்தி வினாசாய
தீப ஜோதி நமஸ்தே”

இதையும் படிக்கலாமே:வாழ்வில் வெற்றி பெற வளர்பிறை அஷ்டமி வழிபாடு

எளிமையான இந்த ஸ்லோகத்தை முழுமனதோடு ஒரு முறை கூறிவிட்டு பிறகு தீபம் ஏற்றுவதன் மூலம் அந்த தீபத்தில் இருக்கக்கூடிய தீபலட்சுமி நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருள்பாள், அதன் மூலம் நாம் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்