இந்த விளக்கு எரியும் வீடு வீணா போனதாக சரித்திரமே கிடையாது. உங்கள் வீட்டை கோவிலாக மாற்றக்கூடிய இந்த விளக்கை ஏற்ற யாரும் தவற விடாதீங்க.

vilakku
- Advertisement -

விளக்கு ஏற்றக்கூடிய வீடு வீணா போகாதுங்க. இதுதான் நிதர்சனமான உண்மை. இந்த வார்த்தை சில பேருக்கு மன கஷ்டத்தை கொடுத்தாலும், இதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தினம் தினம் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவதில் ஒரு மன நிம்மதி இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் காரணங்களை நாம் சொல்லலாம் விளக்கு ஏற்றாமல் இருப்பதற்கு. ஆனால் விளக்கு ஏற்றுவதற்கு ஒரு காரணம் கூடவா இருக்காது. அப்படி நம் வீட்டில் தினம் தினம் ஏற்ற வேண்டிய அந்த விளக்கு என்ன, அதை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை பற்றிய ஒரு ஆன்மீக ரீதியான தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேருக்கு நினைத்த காரியம் நடக்காது. எதுவுமே சரியாக அமையாது. நல்ல நேரமாக இருந்தாலும் சரி, கெட்ட நேரமாக இருந்தாலும் சரி, வர வாய்ப்புகள் தட்டி கழிந்து கொண்டே செல்லும். என்ன செய்வது என்று புரியாது. வீடு ஏதையோ இழந்தது போல தோன்றும். வீட்டில் அந்த லட்சுமி கடாட்சம் ஏதோ ஒரு வகையில் குறைவதை நம்முடைய மனது சொல்லும். இதற்கெல்லாம் உங்களுடைய வீட்டில் ஏதேதோ காரணங்கள் இருக்கலாம். அது எல்லாவற்றையும் ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிரச்சனையை தரக்கூடிய காரணங்கள் எதுவாக இருந்தாலும், கச்சிதமாக அதை சரி செய்ய வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி இதை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். காலை நான்கு முப்பது மணிக்கு எழுந்தாலும் சரி, அல்லது ரொம்பவும் முடியவில்லை பகல் நேரம் முழுவதும் வேலை என்பவர்கள் காலை 5:00 மணிக்காவது எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு வாசலைக் கூட்டி சின்னதாக அரிசி மாவில் குட்டி கோலம் போட்டாலும் போதும். கோலம் போட்டுவிட்டு பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது. இருப்பினும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரம் விலக இந்த நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு சிறப்பு.

நெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுக்கு வேண்டிய வரங்களை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள். உங்களுக்கு எதுவுமே தேவை இல்லை என்றாலும் குடும்பம் சிறப்பாக செழிப்பாக வளர வேண்டும் என்ற பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம். அதன் பின்பு உங்களுடைய பூஜையை கற்பூர ஆரத்தி காண்பித்து நிறைவு செய்து கொள்ளலாம். தினமும் கற்பூர ஆரத்தி காண்பிக்க முடியாது என்பவர்கள் பரவாயில்லை. விளக்கு மட்டும் ஏற்றி வைத்தால் கூட போதும். (வீட்டில் மற்றவர்கள் எல்லாம் தூங்கும் போதும் இந்த விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது.)

- Advertisement -

ஐந்து மணிக்கு நீங்கள் காலையில் எழுந்தால் இந்த வேலையை செய்து முடிக்க 6 மணி ஆகும். அவ்வளவு தான். அதன் பின்பு உங்களுடைய தினசரி வேலையை தொடங்கி பாருங்கள். காலையில் நீங்கள் இந்த வேலையை செய்ய வெறும் ஒரு மணி நேரம்தான் செலவழித்தீர்கள். அந்த ஒரு மணி நேரம் உங்களுடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றி உங்கள் கையில் தரும்.

உங்களுடைய வீடு எத்தனை மங்களகரமாக இருக்கும் என்பதை நீங்களே உணர்வீர்கள். உங்களுடைய மனதும் சுறுசுறுப்பாக இருக்கும் அன்றைய நாள் நீங்கள் புதியதாக பிறந்ததாக உணர்வீர்கள். நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடைபெற தொடங்கும். உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் அவ்வளவு நிறைவாக இருக்கும்.

இவை எல்லாம் ஒரே நாளில் நடந்து விட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உங்களுடைய வீட்டில் இன்றைய சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். 48 நாள் மேலே சொன்ன வழிபாட்டை கடை பிடியுங்கள். 48 நாள் கழித்து உங்களுடைய வீடு எப்படி இருக்கிறது என்பதில் வித்தியாசத்தை நீங்களே உணருவீர்கள்.‌

பெண்களால் அந்த மூன்று நாட்கள் விளக்கு ஏற்ற முடியாது. ஆனால் அந்த நேரத்தில் கூட நீங்கள் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வாசலைக் கூட்டி கோலம் போட்டு வீட்டில் சுவாமி பாடல்களை ஒலிக்க செய்யலாம் தவறு கிடையாது. வீட்டில் மற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களை விளக்கு ஏற்ற சொல்லலாம் தவறு கிடையாது. இந்த ஒரு விளக்கின் வெளிச்சம் உங்களுடைய வாழ்நாள் முழுவதிலும் பிரகாசமாக பிரதிபலிக்கும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -