டீ குடிக்கும் பொழுது பிரட் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கீங்களா? இதை செய்ய 10 நிமிஷம் கூட ஆகாது செஞ்சு சாப்பிட்டு பாருங்க, இவ்வளவு நாளா இதை அனுபவிக்காம விட்டுட்டோமேன்னு நினைப்பீங்க!

- Advertisement -

மாலையில் டீ அல்லது காபி போடும் பொழுது கூடவே ஏதாவது ஒரு பஜ்ஜி இருந்தால் ரொம்பவே ருசியாக இருக்கும். குறிப்பாக இந்த பிரட் பஜ்ஜி இன்னும் அந்த நேரத்தை இனிமையாக்கி கொடுக்கும். கொஞ்சம் இனிப்பு சுவையுடன், காரமும் சேர்ந்த இந்த பிரட் பஜ்ஜி செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது. அருமையான சுவையில் டேஸ்டியான மொறு மொறு பிரட் பஜ்ஜி எப்படி நம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 4, கடலை மாவு – ஐந்து டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொரிக்க சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

செய்முறை

பிரட் பஜ்ஜி செய்ய முதலில் நாலு பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் முக்கோண வடிவில் கிராஸ் ஆக வெட்டி இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பஜ்ஜி செய்வதற்கு தேவையான மாவை தயார் செய்ய வேண்டும். பஜ்ஜி மாவு தயார் செய்வதற்கு ஒரு பவுலில் ஐந்து டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் மொறு மொறு என்று வருவதற்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் இதனுடன் காரத்திற்கு அரை டீஸ்பூன் மட்டும் வெறும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி வாய்வு என்பதால் கால் டீஸ்பூன் அளவிற்கு பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரேடியாக தண்ணீர் சேர்த்தால் மாவு கட்டி தட்டி விடும், எனவே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கரையுங்கள். கெட்டியாக கரைத்து வைத்த இந்த மாவில் இப்பொழுது வெட்டி வைத்துள்ள ஒவ்வொரு பிரெட் துண்டுகளையும் எல்லா இடங்களிலும் படும்படி நன்கு முக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்து அதில் கொஞ்சம் போல உங்கள் தேவைக்கு ஏற்ப எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஒரு கப் கோதுமை மாவும் ரெண்டு முட்டையும் இருந்தா அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி. இப்படி மட்டும் செஞ்சு கொடுத்தா பசங்க டிபன் பாக்ஸ்ல எதையும் மிச்சம் வைக்க மாட்டாங்க.

எண்ணெய் கொதிக்க பின்பு அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் போட்டு இருபுறமும் பொன்னிறமாக சிவக்க வறுக்க எடுத்து வைத்தால் சூப்பரான பிரட் பஜ்ஜி நொடியில் தயார்! இதனுடன் சுடசுட டீ அல்லது காபி வைத்து குடித்து பாருங்கள், அவ்வளவு சுவையாகவும், அருமையாகவும் இருக்கும். இவ்வளவு நாளாக இதை தெரிஞ்சுக்காம இருந்துட்டோமே, இந்த சுவையை அனுபவிக்காமல் இருந்திருப்போமே என்று கண்டிப்பாக ஃபீல் பண்ணுவீங்க!

- Advertisement -