ஒரு கப் கோதுமை மாவும் ரெண்டு முட்டையும் இருந்தா அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி. இப்படி மட்டும் செஞ்சு கொடுத்தா பசங்க டிபன் பாக்ஸ்ல எதையும் மிச்சம் வைக்க மாட்டாங்க.

egg partha
- Advertisement -

வீட்டில் தாய்மார்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே குழந்தைகளை சாப்பிட வைப்பது தான். அதிலும் பள்ளிக்கு செல்லும் போது காலையில் சாப்பிட வைத்து மதியம் சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிட வைக்க பெரும்பாடு பட வேண்டும். என்ன தான் அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தாலும் கூட மிச்சம் வைத்து விடுவார்கள். இந்த டென்ஷனை குறைக்க இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இனி உங்க குழந்தைங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடற ஒரு அருமையான ரெசிபியை தயார் பண்ணலாம் வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

செய்முறை

இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து கால் டீஸ்பூன் உப்பு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இது பத்து நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இந்த பத்து நிமிடத்திற்குள் பரோட்டாவுக்குள் தேவையான ஸ்டஃபிங்கினை தயார் செய்து விடுவோம். அதற்கு ஒரு பவுலில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஒரு கொத்து கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அதே போல் ஒரு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்து கலந்து விடுங்கள்.

இப்போது நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக தயார் செய்து கொண்டு ஒவ்வொரு உருண்டையும் நல்ல மெலிதான சப்பாத்திகளாக திரட்டி கொள்ளுங்கள். இது எவ்வளவு மெலிதாக பெரிதாக உங்களால் திரட்ட முடியுமோ அந்த அளவிற்கு எண்ணெய் தடவி திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஸ்டப்பிங் உள்ளே வைத்து செய்ய சரியாக இருக்கும்.

- Advertisement -

இப்போது திரட்டிய இந்த சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு வேக விடுங்கள். லேசாக வெந்தவுடன் நாம் தயாரித்து வைத்திருக்கும் ஸ்டப்பிங் இந்த பரோட்டாவின் இடையில் ஊற்றி நான்கு புறமும் மடித்து மெதுவாக போல்டிங் செய்ய வேண்டும். அதன் பிறகு திருப்பி போட்டு எண்ணெய் அல்லது நெய் எது வேண்டுமானாலும் ஊற்றி சிவந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தக்காளியே இல்லாமல் இவ்வளவு ருசியாக கார சட்னி அரைக்க முடியுமா? இந்த ரெசிபி கூட நல்லா தான் இருக்கு.

அருமையான கோதுமை முட்டை பரோட்டா சூப்பராக தயார். இந்த ரெசிபியை மட்டும் நீங்க செஞ்சு கொடுத்தீங்கன்னா போதும் குழந்தைங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடு வாங்க. உங்களுக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டுமே என்ற டென்ஷன் இருக்காது. இந்த ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -