டீ போடும் 5 நிமிடத்தில் இந்த போண்டாவை சுட்டு எடுத்து விடலாம். இந்த 2 பொருள் இருக்கா உங்க வீட்ல? சூப்பர் டீ டைம் ஸ்னாக்ஸ் உங்களுக்காக!

bread-bonda
- Advertisement -

சில பேருக்கு கார வகைகளில் ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்காது. கொஞ்சம் இனிப்பு சுவையும் மொறுமொறுவென சாப்பிட்டால் ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸ் ரொம்பவும் பிடிக்கும். உங்கள் வீட்டில் மிக மிக சுலபமாக வெகு சில பொருட்களை வைத்தே செய்யக்கூடிய இந்த சுலபமான பிரட் போண்டாவை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு பிரட் ஸ்லைஸ், தேங்காய் துருவலும் இருந்தாலே போதும். வெறும் அஞ்சு நிமிஷத்துல இந்த ஸ்னாக்ஸ் செஞ்சிடலாம். ரெசிபியை பார்த்து விடலாமா?

bread2

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 லிருந்து 6 ஸ்லைஸ் பிரட் போட்டுக் கொள்ள வேண்டும். 1/2 கப் அளவு தேங்காய் துருவலை சேர்த்து, இதை இருபதிலிருந்து முப்பது செக்கியன்ஸ் வரை அரைத்தால் மட்டும் போதும். மிக்ஸியை சும்மா 2 ஓட்டு ஓட்டினால் போதும். தேங்காய் துருவலும் பிரட்டும் நன்றாக அமைய அரைந்துவிடும்.

- Advertisement -

இந்த கலவையை ஒரு அகலமான பவுலில் கொட்டிக் கொள்ளுங்கள். இனிப்புக்கு தேவையான அளவு நாட்டு சர்க்கரையையோ அல்லது வெள்ளை சர்க்கரையை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு முந்திரி பருப்பு உலர் திராட்சை இவைகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் அளவு மட்டுமே பாலை ஊற்றி பிசைந்தால் போதும்.

இந்த கலவையானது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்துவிடும். ஆனால் அழுத்தம் கொடுக்காமல் சாஃப்டாக  பிசைந்து கொள்ளுங்கள். அதன் பின்பு இதை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள். (ஒரு அகலமான பௌலில் பிரட் தேங்காய்துருவல் சேர்ந்த கலவை, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த முந்திரி பருப்பு, உடைத்த பாதாம் பருப்பு, உலர் திராட்சை அவ்வளவு தான். இந்த கலவையை கொஞ்சமாக பால் விட்டு பிசைய போகிறீர்கள்.)

- Advertisement -

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்து, மிதமான தீயில் வைத்து விட்டு அதன் பின்பு இந்த உருண்டைகளை போட்டு பக்குவமாக பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுத்துப் பாருங்கள். தேங்காயுடன் பிரட் பால் சேர்த்து எண்ணெயில் சிவக்கும் போது உங்களுக்கு நல்ல வாசம் வீசும்.

bread-bonda2

சுட சுட ஒரு சாஸ் வைத்து, இந்த பிரட் போட்டாவை பரிமாறினாலும் சூப்பரா எல்லோரும் சாப்பிடுவாங்க. இந்த போண்டாவை கொஞ்சம் வித்தியாசமாகவும் செய்யலாம், பிரட் கலவையின் உருண்டை களுக்கு நடுவில் சீஸ் வைத்து உருண்டை செய்து எண்ணெயில் பொரித்தெடுத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இந்த சுலபமான ஸ்னாக்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்டிலேயும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சுட சுட இட்லிக்கு இந்த தக்காளி குழம்பை காரசாரமாக தொட்டு சாப்பிட்டால், நிச்சயமா 10 இட்லி கூட பத்தாது. நீங்களும் உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -