4 பிரட் துண்டு இருந்தா ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்துடலாம். இது சாப்ட ரொம்பவே கிரிஸ்பியா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுப்பது வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு எப்போதுமே டென்சனான விஷயம் தான். நாலு ஸ்லைஸ் பிரட் இருந்தால் அதை வைத்து நல்ல சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்துடலாம். இதை செய்யறது ரொம்ப சுலபம் தான். வீட்டில் இருக்கும் பொருளை வைத்து அஞ்சே நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். வாங்க அந்த ஈவினிங் ஸ்நாக்ஸ் எப்படி ரெடி பண்றது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 4, வெங்காயம் -1, பச்சை மிளகாய் -3, துருவிய கேரட் – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு -1டேபிள் ஸ்பூன், பெருங்காயம் -1 சிட்டிகை, கருவேப்பிலை கொத்தமல்லி -1 கைப்பிடி, எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை

இந்த பிரட் போண்டா செய்ய முதலில் நாலு பிரட் துண்டுகளுடன் பாதி வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை ஒரு பவுலில் மாற்றிய பிறகு மீதி இருக்கும் பாதி வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி இந்த மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கேரட், கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள் இவற்றுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பிரட் போண்டாக்கு மாவு தயாராகி விட்டது. அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீயிக்கு மாற்றிய பிறகு இந்த மாவை எடுத்து பகோடா போடுவது போல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காயை வைத்து இப்படி கூட பச்சடி சமைக்கலாமா? காலையில் இதை செய்து விட்டால் மூன்று வேலைக்கும் குழம்பு பிரச்சனை இல்லை.

பிரட்டை வைத்து செய்யும் இந்த போண்டா மிகவும் கிரிஸ்பியாகவும் அதே நேரத்தில் நல்ல ஒரு வித்தியாசமான சுவையுடன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சட்டு என்று செய்து கொடுத்துவிடலாம் . நீங்களும் உங்க வீட்டு குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுத்துப் பாருங்கள் திரும்பத் திரும்ப செய்து கொடுக்க சொல்லி கேட்பாங்க.

- Advertisement -