வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சூப்பரான ‘பிரட் சில்லி’ 10 நிமிடத்தில் செய்துவிடலாமே! இன்னைக்கு ஈவ்னிங்கே உங்க வீட்ல, இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

bread-chilli
- Advertisement -

நிறையபேர் வீட்டில் பிரட் என்றால் ஜாம் சேர்த்து தான் சாப்பிடுவார்கள். சில பேருக்கு இனிப்பு சுவை பிடிக்காது. காரசாரத்தோடு சில மசாலா பொருட்களை சேர்த்து, பிரெட் சில்லி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் பிடிக்கும். பெரியவர்களுக்கும் பிடிக்கும். சில்லி என்றாலே அதில் கடையில் இருந்து வாங்கும் டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், போன்ற சாஸ் வகைகளை சேர்த்து தானே செய்வோம். இந்த சில்லியில் எந்த சாஸும் பயன்படுத்த போவது கிடையாது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையாக செய்ய முடியும். ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

bread

step 1:
முதலில் 6 ரொட்டித் துண்டுகளை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய ரொட்டித் துண்டுகளை அதில் போட்டு 2 நிமிடங்கள் ரோஸ்ட் செய்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

step 2:
அதன் பின்பு அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பூண்டு துருவல் -1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை கொஞ்சம் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து போடுவதை விட, சிறிய உரலில் வைத்து தட்டியும் போட்டுக்கொள்ளலாம். துருவியும் சேர்த்துக்கொள்ளலாம் சுவை அதிகரிக்கும்.

fry

step 3:
அதன் பின்பு 2 பெரிய அளவு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, கடாயில் சேர்த்து பொன்னிறம் ஆகும் அளவிற்கு வதக்கவேண்டும். கொஞ்சம் கூட பச்சை வாடை அடிக்கக் கூடாது. பச்சை வாடை போகும் வரை வெங்காயத்தை வதக்கினால் தான் பிரெட் சில்லியின்சுவை சூப்பராக இருக்கும்.

- Advertisement -

step 4:
வெங்காயம் வதங்கிய உடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் – 1 ஸ்பூன், (தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்) மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன், இந்த மசாலா பொருட்களை எல்லாம் வெங்காயத்தோடு சேர்த்து 30 வினாடிகள் வதக்கி விடவும்.

bread-chilli1

step 5:
இரண்டு தக்காளி பழங்களை ரொம்பவும் பொடியாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். பார்ப்பதற்கு இது தக்காளி தொக்கு பதத்திற்கு வர வேண்டும். அதாவது கடாயில் ஊற்றி இருக்கும் எண்ணெய் கசிந்து வெளியே வரும் சமயத்தில், தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய குடைமிளகாய்களை இறுதியாக சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வேக வைத்து விட்டு, ரோஸ்ட் செய்து வைத்திருக்கும் ரொட்டித் துண்டுகளை, இந்த கலவையோடு சேர்த்து பக்குவமாக கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் சூடுபடுத்தி, கொஞ்சமாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான சூப்பரான பிரிட் சில்லி தயார். சுலபமாக செய்து விடம் முடியும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா? உங்க வீட்ல இன்னிக்கு ஈவ்னிங்கே ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
மழை காலத்தில் கூட 2 மணி நேரத்துல கெட்டித் தயிரை, வீட்டிலேயே உறைய வைக்க முடியுமா? குளிர் காலத்துக்கு, அவசியம் எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய சமையலறை குறிப்புகள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -