மழை காலத்தில் கூட 2 மணி நேரத்துல கெட்டித் தயிரை, வீட்டிலேயே உறைய வைக்க முடியுமா? குளிர் காலத்துக்கு, அவசியம் எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய சமையலறை குறிப்புகள்.

tips
- Advertisement -

Tip No 1:
குளிர்காலங்களில் நம்முடைய வீடுகளில் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து சாப்பிட்டுவிட்டு, மீதம் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தாலும் அது லேசாக நமுத்து போகத்தான் செய்யும். பிஸ்கட் போட்டு வைத்திருக்கும் டப்பாவுக்குள் இந்த மூட்டையைப் போட்டு வச்சா, பிஸ்கேட் மொறுமொறுன்னு இருக்கும். ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்துக்கோங்க. அதுல கொஞ்சமா சர்க்கரை போட்டுக்கோங்க. 1/2 ஸ்பூன் அளவு சர்க்கரை. அதை சிறிய மூட்டையாக ஒரு ரப்பர் பேண்ட் போட்டு பிஸ்கட் டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

tissue

ஒருவேளை உங்களுடைய வீட்டில் நமத்துப் போன பிஸ்கேட் இருந்தால் அதை இனி வீணாக்காதீர்கள். தோசை சப்பாத்தி சுட்டு விட்டு அடுப்பை அணைத்து விட்டு அந்த தோசை கல்லின் மேல் நமுத்த பிஸ்கட்டுகளை வைத்துவிட்டால், பிஸ்கேட் இரண்டு நிமிஷத்தில் மொறுமொறுன்னு மாறி இருக்கும்.

- Advertisement -

Tip No 2:
தீப்பெட்டியில், தீக்குச்சியை உரசும் இடம் இருக்கும் அல்லவா? மருந்து அட்டை என்று சொல்லுவார்களே! அதன் மேல் ஈரக்காற்று பட்டுவிட்டால் தீக்குச்சிகள் எரியவே எரியாது. தீப்பெட்டியினுடைய மருந்து அட்டையில் லேசாக அரிசி மாவை எடுத்து தடவிவிட்டு, அதன் பின்பு அந்த இடத்தில் தீக்குச்சிகளை உரசினால் தீக்குச்சி உடனே எரியும்.

match-box

Tip No 3:
மழைக்காலங்களில் குளிர்காலங்களில் தேங்காயெண்ணை சீக்கிரமே கட்டியாக மாறிவிடும். அந்த தேங்காய் எண்ணெயில், ஒரு ஸ்பூன் அளவு கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து வைத்தால் எண்ணெய் உறைந்து போகாது.

- Advertisement -

Tip No 4:
கடைசி குறிப்பு சூப்பர் குறிப்பு. மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் கூட இரண்டு மணி நேரத்தில், கட்டித் தயிரை நம் வீட்டில் தயார் செய்துவிடலாம். முதலில் அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான பாலை எடுத்துக்கொண்டு, அதில் 2 ஸ்பூன் அளவு தயிரை உறை போட்டு, நன்றாக கலக்கி விடவேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

curd2

கொஞ்சமாக தண்ணீரை எடுத்து அடுப்பில் வைத்து சூடு படுத்திக் கொள்ளுங்கள். நம் எல்லோரது வீட்டிலும் ஹாட் பேக் இருக்கும் அல்லவா அந்த ஹாட் பேக்குக்கு உள்ளே இந்த சுடு தண்ணீரை ஊற்றி விடுங்கள். சுடு தண்ணீர் மேலே உறை போட்டு வைத்திருக்கும் பாலை சிறிய கிண்ணத்தில் ஊற்றி வைத்து விட வேண்டும். மேலே ஹாட் பேக் மூடியைப் போட்டு மூடிவிடுங்கள். இரண்டே மணி நேரத்தில் சூப்பரான கெட்டித்தயிர் தயாராக இருக்கும். ஹாட் பேக் இல்லாட்டியும் கவலைப்படாதீங்க. இட்லி குக்கர், பிரஷர் குக்கர், காற்று வெளியில் போகாத பெரிய டப்பா எது வேண்டுமென்றாலும் இந்த டிப்ஸ்க்கு யூஸ் பண்ணிக்கலாம். உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -