- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பிரட் அல்வாவை ஒரு முறை இப்படி செய்து குடுத்து பாருங்க, திரும்ப திரும்ப...

பிரட் அல்வாவை ஒரு முறை இப்படி செய்து குடுத்து பாருங்க, திரும்ப திரும்ப இதையே செய்ய சொல்லி கேப்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

முன்பெல்லாம் இந்த பிரட் அல்வாவை முஸ்லிம் வீட்டு கல்யாணங்களில் மட்டும் தான் அதிகம் செய்து வந்தார்கள். இப்போதெல்லாம் கடைகளில் பிரியாணி வாங்கும் போது இந்த பிரட் அல்வாவுடன் தான் தருகிறார்கள். இது மற்ற அல்வாக்களை போல அல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து குறைவான நேரத்தில் எளிமையாக செய்து விடலாம். ஆகையால் தான் பெரும்பாலும் இப்போதெல்லாம் அணைத்து இடங்களிலும் இதையே செய்கிறார்கள். வாங்க நம்ம இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த பிரட் அல்வாவை மேலும் சுவையாக எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 10, நெய் – 1/4 கப், சர்க்கரை – 1கப், பால் – கப், ஏலக்காய் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை முந்திரி – 20, எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை

பிரட் அல்வா செய்வதற்கு முதலில் பிரட்டை சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, எடுத்து வைத்த பிரட் துண்டுகளை போட்டு நல்ல கோல்டன் கலர் வரும் வரையில் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இது பொரிக்கும் போது எண்ணெய் மிதமான சூட்டில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் பிரட் துண்டுகள் எண்ணெய் குடிக்காமல் நல்ல பொன்னிறமாக வரும். அல்வாவும் நல்ல ருசியாக இருக்கும். இதற்கு இந்த பிரட்டை பொரித்து எடுக்கும் பக்குவம் மிகவும் முக்கியம். இப்படி பொரித்து எடுத்த பிரட் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில், அதில் இருக்கும் எண்ணெய் வடியும் வரை வைத்திடுங்கள்.

- Advertisement -

மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்த பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்பை சேர்த்து நல்ல பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் ஊற்றிய பிறகு, நன்றாக காய்ச்சி ஆற வைத்த புல் கிரீம் மில்க் ஒரு கப் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் இவைகளை சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, பொரித்து எடுத்த பிரட் துண்டுகளை இதில் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது இதை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். பிரட் துண்டுகள் அதில் இருக்கும் பால், தண்ணீர் எல்லாவற்றையும் உறிஞ்சி சுரண்டு வரும். இதை நீங்கள் கிண்டும் போதே மீதம் இருக்கும் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே வர வேண்டும். பிரட் அல்வா கடாயில் ஒட்டாமல் சுருண்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.

- Advertisement -

அவ்வளவு தான் சுவையான பிரட் அல்வா சுலபமாக தயார் செய்து விட்டோம். இதை செய்யும் போது கவனிக்க வேண்டிய இரண்டு விஷயம் ஒன்று பிரட் பொரிக்கும் போது எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் வைத்த பின் தான் பொரிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இப்படி இடியாப்பம் செய்தால், அதை ஆவியில் வேக வைக்க வேண்டாம். பிழிந்து அப்படியே சாப்பிடலாம். கஷ்டப்படாமல் இடியாப்பம் செய்ய இப்படி ஒரு வழி இருப்பது கொள்ளு பாட்டிக்கு கூட தெரியாது.

அடுத்தது நல்ல திக்கான நல்ல காய்ச்சிய பாலை தான் ஊற்ற வேண்டும். பாலுக்கு பதிலாக கன்டென்ஸ் மில்க் இருந்தால் அதை சேர்த்துக் கொள்ளலாம். அதை சேர்க்கும் போது சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் செய்யும் போது பிரட் அல்வா நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் உங்களுக்கு கிடைக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்