இப்படி இடியாப்பம் செய்தால், அதை ஆவியில் வேக வைக்க வேண்டாம். பிழிந்து அப்படியே சாப்பிடலாம். கஷ்டப்படாமல் இடியாப்பம் செய்ய இப்படி ஒரு வழி இருப்பது கொள்ளு பாட்டிக்கு கூட தெரியாது.

Idiyappam-1
- Advertisement -

பூப்போல ரேஷன் பச்சரிசியில் சூப்பரான சுவையான இடியாப்பம் எப்படி செய்வது என்றுதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இது முற்றிலும் வித்தியாசமான இடியாப்பம் ரெசிபி. உங்களுடைய வீட்டில் பச்சரிசி இருந்தால் போதும். அதாவது மாவு பச்சரிசியில் இந்த இடியாப்பம் செய்தால் அவ்வளவு சாஃப்ட்டாக கிடைக்கும். கஷ்டப்படாமல் அழகாக இந்த இடியாப்பத்தை செய்து, கூட தேங்காய் பால் வைத்தால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள்ள போகலாம் வாங்க.

செய்முறை

முதலில் 1 1/2 கப் அளவு பச்சரிசியை எடுத்து நன்றாக கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றி மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நீங்கள் காலையில் இடியாப்பம் செய்யப் போகிறீர்கள் என்றால் இரவு கூட அரிசியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கலாம்.

- Advertisement -

நன்றாக ஊறிய பச்சரிசியை ஒருமுறை கழுவி அதில் இருக்கும் தண்ணீரை எல்லாம் வடித்து விடுங்கள். வெறும் பச்சரிசியை மட்டும் மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதில் 1/2 கப் அளவு தேங்காய் துருவல், 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி இடியாப்பத்திற்கு தேவையான அளவு உப்பு போட்டு, நைசாக அரைக்க வேண்டும். (1 1/2 கப் அளவு பச்சரிசி மாவுக்கு, 2 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.

மாவு கிளறுவதற்கு அந்த மீதம் 1 1/2 கப் அளவு தண்ணீரை நாம் பயன்படுத்துவோம்.) மாவு கொரகொரப்பாக எல்லாம் இருக்கக் கூடாது. நைசாக மாவு அரைபட்டு கிடைக்க வேண்டும். (எந்த கப்பில் பச்சரிசியை அளந்தீங்களோ அதே கப்பில் தேங்காயையும் தண்ணீரையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.)

- Advertisement -

இப்போது அடுப்பில் அடிகனமான ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 1/2 கப் அளவு தண்ணீரை அளந்து ஊற்றுங்கள். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, தண்ணீரில் லேசாக சூடாகி வந்ததுமே மிக்சி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவை இந்த தண்ணீரில் ஊற்றி கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடத்தில் மாவு நன்றாக வெந்து கட்டிப்பிடித்து கடாயில் ஒட்டாமல் நமக்கு கிடைக்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் மாவை ஒருமுறை கையை கொண்டு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து சிலிண்டர் வடிவத்தில் உருட்டிக் கொள்ளுங்கள். (மாவை ரொம்பவும் ஆரவிடவும் கூடாது.) அதாவது முறுக்கு அச்சுக்கு உள்ளே போடக்கூடிய அளவில் மாவுகளை உருட்டி, தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை இட்லி வேக வைப்பது போல ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதன் மேலே உருட்டிய இந்த பச்சரிசி மாவு உருண்டைகளை அடுக்கி இட்லி, பாத்திரத்தில் வைத்து அப்படியே 10 நிமிடங்கள் வேகவைத்து விடுங்கள். மாவு சூப்பராக வெந்து நமக்கு கிடைத்துவிடும்.

அவ்வளவுதான். வேலை முடிந்தது. இந்த சிலிண்டர் வடிவத்தில் இருக்கும் உருண்டைகளை, சூடாக இருக்கும் போதே எடுத்து ஒவ்வொன்றாக இடியாப்ப அச்சில் போட்டு அப்படியே தட்டில் வட்டமாக பிழிந்து விட்டால் சூப்பரான இடியாப்பம் தயாராகிவிடும். இதன் மேலே தேங்காய் பால் அல்லது குருமா ஊற்றி சாப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்பரானா எக் மஞ்சூரியனை ரொம்ப ஈஸியா வீட்ல செய்யலாம். டேஸ்ட் வேற லெவெல இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் அசைவ பிரியர்களாக இருந்தால் பாயா சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். நாம இடியாப்ப தட்டில் இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேக வைப்பதை விட, வேக வைத்த பச்சரிசி மாவில் இடியாப்பம் பிழிவது மிக மிக சுலபமாகத்தான் இருக்கும். நீங்க வேணும்னா ஒரே ஒருமுறை இந்த முறையில் இடியாப்பம் செய்து தான் பாருங்களேன். வாரத்தில் ஒரு நாள் ஆவது பிறகு கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்ல இருக்கும்.

- Advertisement -