- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கிராமத்து சுவையில் அருமையான பிஞ்சு கத்தரிக்காய் மொச்சைக்கொட்டை பொரியலை ஒரு முறை இப்படி செய்து சுவைத்து...

கிராமத்து சுவையில் அருமையான பிஞ்சு கத்தரிக்காய் மொச்சைக்கொட்டை பொரியலை ஒரு முறை இப்படி செய்து சுவைத்து பாருங்கள்

- Advertisement -

என்ன தான் பீட்சா, பர்கர் என்ற நாகரீக உணவு முறைக்கு மாறிவிட்டாலும் அனைத்து விதமான வயதினரும் ஒன்று கூடி பேசும் பொழுது எங்களது ஊரில் எனது அத்தை செய்த இந்த சாப்பாடு, எனது பாட்டி செய்த இந்த குழம்பு அவ்வளவு சுவை என்று பேசிக் கொண்டிருப்பதை ஒரு முறையாவது கவனித்திருக்கலாம். அவ்வாறு கிராமத்து உணவுகளுக்கு என்று தனிப்பட்ட சுவை இருக்கிறது. ஒருமுறை அந்த சுவையை ருசித்து விட்டால் என்றென்றும் அது நமது நாவை விட்டு மறையாது. அவ்வாறு அவர்கள் செய்யும் பக்குவமே தனி விதமாகத்தான் இருக்கும். அவர்கள் கை மனமும், அவர்கள் செய்யும் விதமும் ஒரு தனிப்பட்ட சுவையை அந்த உணவிற்கு கொடுத்துவிடும். இவ்வாறு அவர்கள் செய்யும் உணவுகளில் ஒன்றான இந்த கத்தரிக்காய் மொச்சை பயறு பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பிஞ்சுக் கத்திரிக்காய்  – கால் கிலோ, பச்சை மொச்சை – 100 கிராம், நாட்டுப் பூண்டு – 4 பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சோம்பு – அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, நாட்டுத் தக்காளி – 4, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்தரிக்காய் பிஞ்சுகளை நான்கு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின்னர் தக்காளி, வெங்காயம் இவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு முதல் நாள் இரவே மொச்சை பயிரை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி விட்டு, மறுபடியும் அது தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

பிறகு மறுநாள் காலை மொச்சை பயிரில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, மொச்சை பயிரை குக்கரில் சேர்த்து, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு பூண்டு மற்றும் இஞ்சி சிறிய உரலில் வைத்து நசுக்கி, அதனையும் எண்ணெயில் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு இவற்றுடன் நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள கத்தரிக்காயையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்னர் இவற்றிற்கு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நன்றாக வெந்ததும், இறுதியாக இவற்றுடன் வேக வைத்துள்ள மொச்சைப் பயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும்.

சற்று முன்