உங்கள் நட்சத்திரப்படி எந்த கடவுளை எப்படி வணங்கினால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா? நட்சத்திரத்திற்கு உரிய அர்ச்சனை மலர்கள் என்ன?

murugan-iruvatchi-astro
- Advertisement -

நாம் பிறந்த ஜன்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் அந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட கடவுளாக இருப்பவர்களை, அந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட மலரை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் அத்தனை தடைகளும் அகன்று நமக்குரிய வெளிச்சம் தென்படும் என்பது ஜோதிட நியதி. இதன் அடிப்படையில் நம்முடைய ஜென்ம நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட கடவுள் யார்? நம்முடைய நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட மலர் என்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.:

Goddess Saraswathi

அஸ்வினி:
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் கலைமகள் ஆக இருக்கும் ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி சாமந்தி மலர்களால் அவர்களுக்கு அர்ச்சனை செய்ய அத்துணை அதிர்ஷ்டமும் வந்து சேரும்.

- Advertisement -

பரணி:
பரணி நட்சத்திரக்காரர்கள் முல்லை மலர்களால் ஸ்ரீ துர்க்கை அம்மனை அர்ச்சித்து வழிபட்டு வந்தால் எல்லா அதிர்ஷ்டமும் வந்து சேரும்.

Durgai amman

கிருத்திகை:
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் முருகப் பெருமானை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய சகல, சௌபாக்கியங்களும் வந்து சேரும்.

- Advertisement -

ரோகினி:
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பாரிஜாத மலர்களால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் எல்லா நலனும் பெறலாம்.

sri-krishna1

மிருகசீரிஷம்:
மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் ஜாதிமல்லி மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா தடைகளும் அகன்று செல்வ பாக்கியம் உண்டாகும்.

- Advertisement -

திருவாதிரை:
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சிவபெருமான் வழிபாடு செய்து அவருக்கு வில்வ பூக்களால் அர்ச்சனை செய்தால் எல்லாப் பாக்கியங்களும் கிடைக்கும்.

vilvam-sivan

புனர்பூசம்:
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ ராமருக்கு மரிக்கொழுந்து இலைகளால் அர்ச்சனை செய்து வர எல்லா நலன்களும், வளங்களும் பெறலாம்.

பூசம்:
பூச நட்சத்திரக்காரர்கள் பன்னீர் ரோஜா மலர்களால் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா அதிர்ஷ்டங்களும் வந்து சேரும்.

dhatchinamoorthi

ஆயில்யம்:
ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் ஆதிசேஷனை வழிபட்டு செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வர எல்லா சௌபாக்கியங்களும் உண்டாகும்.

மகம்:
மகம் நட்சத்திரக்காரர்கள் சூரிய பகவானை அதிர்ஷ்ட கடவுளாக கொண்டுள்ளனர். நீங்கள் சூரியனை வழிபட்ட பின்னர் மகாலட்சுமிக்கு மல்லிகை மலர்களால் ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சித்து வழிபட்டு வர எல்லா பாக்கியங்களையும் பெறலாம்.

surya-namaskar1

பூரம்:
பூரம் நட்சத்திரக்காரர்கள் ஆண்டாள் வழிபாடு செய்து அவர்களுக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வர அதிர்ஷ்டம் உண்டாகும்.

உத்திரம்:
உத்திர நட்சத்திரக்காரர்கள் மகாலட்சுமிக்கு கதம்ப மலர்களால் அர்ச்சனை செய்து வர எல்லா அதிர்ஷ்டங்களையும் பெறலாம்.

mahalakshmi

அஸ்தம்:
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ காயத்ரி தேவியை அதிர்ஷ்ட கடவுளாக கொண்டுள்ளீர்கள். நீங்கள் அவருக்கு வெள்ளைத் தாமரை மலரால் அர்ச்சித்து வர அதிர்ஷ்டம் மேலும் பெருகும்.

சித்திரை:
சக்கரத்தாழ்வாரை வழிபட்டு மந்தாரை மலர்களால் மகாலட்சுமி வழிபாடு செய்து வர எல்லா செல்வங்களையும் பெறலாம்.

sakkarathazhvar

சுவாதி:
சுவாதி நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு அவருக்கு பொன்னரளி மலர்களால் அர்ச்சனை செய்து வர சௌபாக்கியம் பெருகும்.

விசாகம்:
விசாக நட்சத்திரக்காரர்கள் இருவாட்சி மலர்களால் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா செல்வங்களையும் பெறுவீர்கள்.

அனுஷம்:
அனுஷ நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபட்டு சிவப்பு முல்லை மலர்களால் அர்ச்சித்து வர அதிர்ஷ்டம் பெருகும்.

கேட்டை:
கேட்டை நட்சத்திரக்காரர்கள் பன்னீர் ரோஜா மலர்களால் அர்ச்சித்து ஸ்ரீ வராக பெருமாள் வழிபாடு செய்து வர எல்லா அதிர்ஷ்டமும் பெறுவீர்கள்.

varagamoorthi

மூலம்:
மூல நட்சத்திரக்காரர்கள் வெள்ளை சங்கு பூவினால் அர்ச்சனை செய்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வர சௌபாக்கியம் பெறலாம்.

பூராடம்:
பூராட நட்சத்திரக்காரர்கள் விருட்சி மலரால் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் வழிபாடு செய்து வர எல்லா வளங்களையும் பெறலாம்.

karpaga-vinayagar

உத்திராடம்:
உத்திராட நட்சத்திரக்காரர்கள் சம்பங்கி மலர்களால் விநாயகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா அதிர்ஷ்டமும் பெறலாம்.

திருவோணம்:
திருவோணம் நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்கி அவருக்கு சிகப்பு ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா நன்மைகளையும் பெறலாம்.

hayagriva

அவிட்டம்:
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து ஸ்ரீ அனந்த சயன பெருமாள் வழிபாடு செய்து வர அதிர்ஷ்டம் பெருகும்.

சதயம்:
சதய நட்சத்திரக்காரர்கள் நீலோற்பலம் என்னும் மலரால் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா நலன்களும் பெறலாம்.

mrutyunjayeshwarar

பூரட்டாதி:
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வெள்ளை அரளி மலர்களால் அர்ச்சனை செய்து ஸ்ரீ ஏகபாதரை வழிபட்டு வந்தால் எல்லா வளங்களும்.

உத்திரட்டாதி:
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மகா ஈஸ்வரரை வணங்கி வழிபட்டு நந்தியாவட்ட மலர்களால் அர்ச்சனை செய்து வர எல்லா வளங்களும் பெறலாம்.

egapathar

ரேவதி:
ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு அவருக்கு செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து வர எல்லா அதிர்ஷ்டமும் பெருகும்.

- Advertisement -