அட! காலையில் எழுந்து பல் துலக்குவதில் இத்தனை இரகசியங்கள் ஒளிந்துள்ளதா? உங்களது வாய்ப் பேச்சால் தான், வாழ்க்கையில் பிரச்சனை வருகிறதா? நீங்கள் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

sani-bagavan
- Advertisement -

காலையில் எழுந்து பல் துலக்கி, குளித்து, மீண்டும் இரவு தூங்கும் வரை நம்முடைய சாஸ்திரத்தில், தனித்தனியாக சில சாஸ்திர முறைகளை நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்து தான் சென்று உள்ளார்கள். நமக்கு காலப்போக்கில் அதெல்லாம் தெரியாமலே போய்விட்டது. காரணம் இளைய தலைமுறைகள், அவை அனைத்தையும் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி வைத்தது விட்டார்கள். காலையில் எழுந்து பல் தேய்ப்பது என்ற ஒரு விஷயமே சிலரிடம் இப்போது இல்லாமல் போய்விட்டது. பெட் காஃபி குடித்துவிட்டு தான் பல் தேய்க்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். என்ன செய்வது? அது அவரவருடைய இஷ்டம். சரி, இன்று பல் துலக்குவதில் இருக்கக்கூடிய ஆன்மீக ரீதியான ஒரு சிறிய ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bresh

இந்த காலத்தில் காலையில் எழுந்து பல் துலக்குவது என்பதே கடினமான விஷயம் என்று இருக்கும்போது, இதில் எங்கிருந்து விதிமுறைகளை பின்பற்றுவது? இப்படி ஒரு விஷயம் உள்ளதை நீங்கள் தெரிந்து மட்டுமாவது வைத்துக் கொள்ளுங்கள். பின்பற்றுகிறார்களோ, இல்லையோ அதுவும் அவரவருடைய இஷ்டம் தான்.

- Advertisement -

பெரும்பாலும் நாம் காலையில் பல் தேய்க்கும் போது நம்முடைய கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் தான் பிரஷில் பிடித்துக்கொண்டு தேய்ப்போம் அல்லவா? ஆனால், அப்படி பிரஷை பிடிக்கும்போது, உங்களுடைய நடு விரலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடுவிரல் என்பது சனி பகவானுக்கு உரிய பொருளாக சொல்லப்பட்டுள்ளது. நடு விரலையும் பயன்படுத்தி பல் தேய்ப்பது என்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். ஆள்காட்டி விரல் கட்டை விரலோடு, இனி மறக்காமல் நடுவிரலையும் சேர்த்து கொள்ளுங்கள்.

sani-baghavan

காலையில் எழுந்து நீங்கள் பல் தேய்க்க நிற்கக்கூடிய திசை என்பது கிழக்கு திசையாக இருந்தால் மிகவும் நல்லது. பல்லை தேய்த்து முடித்துவிட்டு, நிறைய பேர் தங்களுடைய வலதுபக்கம் கழுத்தை திருப்பி எச்சில் துப்பும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால், அது தவறு. எப்போதுமே இடது கைப்பக்கம் திரும்பி தான், நாம் பல் தேய்த்த எச்சிலை துப்ப வேண்டும்.

- Advertisement -

சரி, இப்படி பல் தேய்ப்பதன் மூலம் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமா? நிறைய பேருக்கு பிரச்சனை வருவதே அவர்களுடைய வாயின் மூலம் தான். அதாவது தேவையற்ற இடங்களில் தேவையற்ற விஷயங்களை பேசி மாட்டிக் கொள்வதே சிலருக்கு வழக்கமாக இருக்கும். சில பேர் திட்டும்போது சொல்வார்கள்! உனக்கு ‘வாயில் தான் சனி’ என்று, இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறப்பான ஒரு தீர்வைப் பெற வேண்டுமென்றால் இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் பல்லை தேய்த்து பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் புரியும்.

Sani baghavan

அடுத்தபடியாக சிலருக்கு தொழிலே வாய்ஜால வித்தையை பயன்படுத்தி தான் இருக்கும். வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், தொகுப்பாளர்கள், இப்படிப்பட்ட வேலை செய்பவர்களுக்கு பேச்சு திறன் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த முறையில் பல் தேய்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்க! உங்களுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் பல் தேய்க்கும் பழக்கத்தை மேல் குறிப்பிட்டுள்ள முறைப்படி மாற்றிக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து இப்படி செய்து வருபவர்களுடைய வீட்டில், வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. உங்க வீட்டில் பண மழை பொழிவதற்கு 100% கேரண்டீ.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -