BSNL அறிவித்த அதிரடி ஆப்பர். வாடிக்கையாளர்கள் ஏக குஷி

BSNL
- Advertisement -

தனியார் தோலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ போன்றவற்றோடு போட்டிபோடும் வகையில் பிஎஸ்என்எல் பல அதிரடி சலுகைகளை தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளது. அதில் ஒரு சலுகை இந்த மாதம் மட்டும் செல்லுபடியாகும் வகையிலும் வேறு சில சலுகைகள் வருடம் முழுக்க பயன்பெறும் வகையிலும் உள்ளது. அந்த சலுகைகள் பற்றி தற்போது விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

Bsnl

பிஎஸ்என்எலில் ரூ.429 ற்கு ஒரு திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றிற்கு 1 GB டாட்டாவையும், வழக்கமான கால் வசதிகளையும் பெற்று வந்தனர். தற்போது அந்த திட்டத்தில் ஒரு அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல். அந்த அறிவிப்பின் படி இனி நாள் ஒன்றிற்கு கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துளள்ளது. ஆக ஏற்கனவே இருந்த 1ஜிபி டேட்டாவோடு சேர்த்து 1.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுவதால் மொத்தம் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த அதிரடி சலுகை அக்டோபர் 2019 வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க, பிஎஸ்என்எலில் ரூ.1699 ற்கு ஒரு திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் படி ஒருவர் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் டேட்டா மற்றும் கால் வசதிகளை பெற்று வந்தனர். அந்த திட்டத்திலும் தற்போது அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது பிஎஸ்என்எல். அந்த மாற்றத்தின் படி ஒருவர்
ரூ.1699 க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 90 நாட்கள் வேலிடிட்டி பெறுவார்கள். அதாவது மொத்தம் 455 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

BSNL

அது மட்டும் அல்லாது, அந்த திட்டத்தின் படி ஏற்கனவே ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதில் தற்போது மேலும் 2.2 ஜிபியை உயர்த்தி, ஒருநாளைக்கு 4.2 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது பிஎஸ்என்எல். அதோடு ஒருநாளைக்கு 100 sms மற்றும் விருப்பமான காலர் டியூன்
உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1699 க்கு ரீசார்ஜ் செய்து இந்த அறிய சலுகையை பெறலாம்.

- Advertisement -