இனி கை வலிக்க வலிக்க பாத்ரூம் பக்கெட்டை தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது. இந்த ஐடியாவை மட்டும் நீங்க தெரிஞ்சுகிட்டா.

bucket
- Advertisement -

பொதுவாகவே இப்போது எல்லா இடங்களிலும் உப்பு தண்ணீர் தான் புழக்கத்தில் இருக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை டாய்லெட்டில் இருக்கும் பக்கெட், பாத்ரூமில் இருக்கும் பக்கெட்டை சுத்தமாக தேய்த்து வைத்தாலும், வெள்ளை வெள்ளையாக உப்பு கறை படிந்து பார்ப்பதற்கே அந்த பக்கெட் ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது. இதை சுத்தம் செய்வது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய சவால்தான். சில பேர் வீட்டில் எல்லாம் இந்த பக்கெட்டை பயன்படுத்தவே பிடிக்காது. அவ்வளவு கொடுமையாக இருக்கும். உங்க வீட்டில் இருக்கும் உப்பு கறை படிந்த பாத்ரூம் பொருட்களை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

பாத்ரூம் பக்கெட்டை சுத்தம் செய்யும் எளிமையான முறை:
பெரும்பாலும் பாத்ரூமில் பிளாஸ்டிக் பொருட்களை தான் நாம் பயன்படுத்துவோம் அல்லவா. ஆக உங்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பக்கெட், ஜக் இவைகளை இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள். வைரத்தைக் கொண்டு வைரத்தை அறுக்கலாம் என்று சொல்லுவார்கள். அதே போல உப்பைக் கொண்டுதான் உப்பு கறையை நீக்க போகின்றோம்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் தூள் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கலக்க நன்றாக புளித்த இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி மாவை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்திருப்போம் அல்லவா. மாவு தீர்ந்த பின்பு அந்த இட்லி டப்பாவில் ஓரங்களில் ஒட்டி இருக்கும் மாவை கழுவி கீழே ஊற்றுவோம் அல்லவா. அதை இந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தூள் உப்பு போட்டு கரைத்து இந்த லிக்விடை பக்கெட் முழுவதும் பூசி ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வெறும் ஸ்பாஞ்சினாரை வைத்து தேய்த்தாலே உப்பு கறை நீங்கிவிடும். ஸ்பாஞ்ச் நாரை கொண்டு பக்கெட்டை தேய்க்கும் போது கையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். ஸ்டீல் நாரை வைத்து தேய்த்தால் சுலபமாக இந்த உப்பு கறை நீங்கும். ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் சீக்கிரமே ஸ்கிராட்சஸ் விழும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எந்த நார் சௌகரியமாக இருக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே லிக்விடை வைத்து பாத்ரூமில் இருக்கும் ஸ்டீல் குழாய்களை பிளாஸ்டிக் குழாய்களை கூட எளிமையாக சுத்தம் செய்து விடலாம்.

- Advertisement -

தேய்த்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பக்கெட் ஜக் இவைகளை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு துடைக்க வேண்டும். ஒரு வேஸ்ட் துணி இதற்காக வைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த காட்டன் துணியை வைத்து பக்கெட்டை நன்றாக துடைத்து எடுத்தால், அதில் பூத்திருக்கும் வெள்ளைத் திட்டுக்கள் எல்லாம் கூட சுலபமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக் கொலுசை புதிது போல சுத்தம் செய்ய நம் வீட்டில் வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த பொருள் ஒன்று போதுமே!

வாரத்தில் ஒரு நாள் இப்படி இந்த இரண்டு பொருட்களை போட்டு பாத்ரூம் பொருட்களை சுத்தம் செய்து கொண்டே இருந்தால், உங்கள் பாத்ரூமில் இருக்கும் பிளாஸ்டிக் பக்கெட் ஜக்கும் எப்போதும் புத்தம் புதுசு போலவே இருக்கும். குறிப்பாக பக்கெட்டில் அடிப்பக்கத்திலும், இந்த பேஸ்டை போட்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல பக்கட்டின் கைப்பிடி இருக்கும் அல்லவா, அந்த இடத்திலும் இந்த பேஸ்டை நன்றாக தடவி ஊற வைத்து தேய்த்துக் கொடுங்கள். அந்த இடத்தில் எல்லாம் விடாப்படியான கறை பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -