வெள்ளிக் கொலுசை புதிது போல சுத்தம் செய்ய நம் வீட்டில் வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த பொருள் ஒன்று போதுமே!

- Advertisement -

நம் வீட்டில் வேண்டாம் என்று தூக்கி எறிய கூடிய இந்த ஒரு பொருளில் ஏராளமான விஷயங்களை செய்யலாம். நம் வேலைகளை மிச்சப்படுத்தக்கூடிய இந்த ஒரு பொருள் எப்படி வெள்ளி கொலுசை பளிச்சென்று மாற்றப் போகிறது? அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பது போன்ற வீட்டு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வீட்டில் வேண்டாம் என்று தூக்கி எரியும் பொருட்களில் இதுவும் ஒன்று! நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய பற்பசை அதாவது டூத் பேஸ்ட் பயன்படுத்தி முடிந்ததும் தூக்கி எறிந்து விடுகிறோம். இதை தூக்கி எறியாமல் கத்தரித்து ஒரு பவுலில் தண்ணீரில் போட்டு வையுங்கள். அதன் தலைப்பகுதியையும் தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். இப்படி பேஸ்ட் முழுவதையும் கழுவி எடுத்த பிறகு அந்த தண்ணீரை தான் நாம் பயன்படுத்த இருக்கிறோம்.

- Advertisement -

டூத் பேஸ்ட் கரைந்த இந்த தண்ணீரில் நீங்கள் வெள்ளி கொலுசை போட்டு வையுங்கள். ஒரு அரை மணி நேரம் போட்டு வைத்த பின்பு, கொலுசை எடுத்து பழைய டூத் பிரஸ் ஒன்றை வைத்து லேசாக தேய்த்து கொடுங்கள். இப்படி செய்யும் பொழுது நுரைக்க ஆரம்பிக்கும். இந்த டூத் பேஸ்ட் நுரையிலேயே வெள்ளி கொலுசு புதிதாக வாங்கியது போல பளிச்சென்று மின்ன ஆரம்பிக்கும்.

நன்கு தேய்த்து கொடுத்த பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி கொள்ளுங்கள். பிறகு ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி எலுமிச்சையை கொண்டு கொலுசை முழுவதுமாக எலுமிச்சை மூடியிலேயே தேய்த்து கொடுங்கள். இதுபோல தேய்த்துக் கொடுக்கும் பொழுது இன்னும் பளிச்சென மாறும்.

- Advertisement -

பிறகு மீண்டும் சுத்தமான தண்ணீரில் அலசி ஒரு காட்டன் துணியில் ஒற்றி கொடுங்கள், இதனால் ஈரப்பதம் நீங்கி கொலுசில் இருக்கின்ற விடாப்பிடியான கருமை போய் புதிதாக வாங்கும் பொழுது இருந்த அந்த பளிச்சென்ற வெண்மை காணப்படும். இதற்காக வேறு எந்த கெமிக்கல் பவுடர்களையும் நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

இதுபோல ஒவ்வொரு மாதமும் செய்து வந்தாலே உங்களுடைய கொலுசு எப்பொழுதுமே கருமை அடையாது, புதிதாகவே இருக்கும். இந்த தண்ணீரை வேறு சில உபயோகங்களுக்கும் நாம் பயன்படுத்தலாம். நாம் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமையல் செய்து முடித்த பின்பு லேசாக ஸ்டவ்வின் மீது இதனை ஸ்பிரே செய்து ஸ்க்ரப் செய்தால் எண்ணெய் கரை எளிதாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ஒரு மாசம் வர கேஸ் ரெண்டு மாசம் கூட தாராளமாக வரும்!

அது மட்டும் அல்லாமல் பீங்கானில் செய்யப்பட்ட வாஷ்பேஷன், டாய்லெட் போன்றவற்றை கழுவவும் இதனை பயன்படுத்தலாம். ஸ்ப்ரே செய்து அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக தேய்க்க வைத்திருக்கும் பிரஷை கொண்டு தேய்த்துக் கொடுத்தால், செம ரிசல்ட் கிடைக்கும். நாம் எதையெல்லாமோ ட்ரை பண்ணி பார்த்திருப்போம். இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க, இதனுடைய ரிசல்ட் வேற மாதிரி இருக்கும். நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு பொருட்கள் பளிச்சென்று மின்னும். அது மட்டும் அல்லாமல் கிச்சன் மேடையை கூட இதை வைத்து நீங்கள் துடைத்து கொடுத்தால் வாசனையாக இருக்கும்.

- Advertisement -