தோஷம் நீக்கி வெற்றி தரும் புத பகவான் மந்திரம்

Perumal-1

“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்றொரு சொல்வழக்கு உண்டு. அதாவது இரவு நேரத்தில் விண்ணில் “பொன்” என்ற “வியாழன்” கிரகத்தை பார்க்க முடிந்தாலும் “புதன்” கிரகத்தை நாம் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது என்பதே இந்த சொல்வழக்கின் உண்மை பொருளாகும். நவகிரகங்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட ஒரு மனிதனின் வாழ்வில், அவனது அறிவாற்றல் மற்றும் அவன் உடலிலுள்ள நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் “புதன் பகவான்” சரியான நிலையில் இல்லை என்றால் “புதன் கிரக தோஷம்” ஏற்படுகிறது. அந்த புதன் கிரக தோஷத்தை நீக்கும் மந்திரம் தான் இது. இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தோஷம் நீங்கி வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களை தேடி வரும்.

Budhan Manthiram

மந்திரம் :
“ப்ரியங்கு கவிகாச் யாமம்
ரூபேணா ப்ரதி மம் புதம்
ஸௌம்யம் சௌம்ய குணோ பேதம்
தம் ப்ரணாமாம் யஹம்”

இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் காலை மற்றும் மாலையில், உங்கள் வீட்டில் புதன் பகவானின் அம்சம் கொண்ட “விஷ்ணு” பகவானின் படத்திற்கு முன்பு துளசி இலைகள் மற்றும் சாமந்தி பூ வைத்து நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் அங்குள்ள புதன் பகவான் சந்நிதியில், பச்சைப்பயிறு அல்லது அப்பச்சைப்பயிராலயான ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை நிவேதனமாக வைத்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட புதன் பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். அதோடு தொழிலில் நல்ல முன்னேற்றம், எதிலும் வெற்றி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
எந்நேரமும் மன நிம்மதியோடு வாழ மந்திரம்

English overview:
Here we have Budhan bhagavan mantra in Tamil. By chanting this mantra one can get away from Budhan dhosam and his wealth will get increase.