ஒருமுறை உங்களது பெயரை இந்த பேனாவில், இப்படி எழுதினாலே போதும். புதன் பகவான் கோடிகோடியாக அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொட்டி கொடுத்து விடுவார்.

budhan bagavan

ஒருவருடைய வாழ்க்கையில், ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வார்கள் அல்லவா. இந்தக் கூற்று முற்றிலும் உண்மையான ஒன்றுதான். பொன்னும் பொருளும் நமக்கு கிடைத்தால் கூட, இந்த புதன் பகவானின் ஆசீர்வாதத்தை நம்மால் அடையவே முடியாது. ஏனென்றால் புதன் பகவானின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்து விட்டால் வாழ்க்கையில் அத்தனை செல்வங்களும் நமக்கு கிடைத்துவிடும். பொன் பொருளை கையில் வைத்திருந்தாலும், யோகமான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த புதன் பகவானின் ஆசிர்வாதம் தான் நமக்கு கிடைக்க வேண்டும். அப்படி புதன் பகவானின் ஆசீர்வாதம் கிடைத்து விட்டால், நீங்கள் இராஜ வாழ்க்கையை நிச்சயமாக வாழலாம்.

Nakshatra

காசு பணத்தை தவிர்த்தது, ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் அவருக்கு அறிவுத்திறன் அவசியம் தேவைப்படும், அதிர்ஷ்டம் தேவைப்படும், ஆளுமை திறமை படிப்பு, அழகு, தொலைநோக்கு சிந்தனை, பேச்சு திறமை இப்படி வாழ்க்கையில் பலவிதமான திறமைகள் தேவைப்படும்.  வாழ்க்கையை உயர்ந்த நிலையில் வாழ ஒரு மனிதனுக்கு எந்தெந்த விஷயங்கள் எல்லாம் தேவைப்படுகிறதோ அந்த விஷயங்களை கொடுப்பவர் தான் இந்த புதன் பகவான். கையில் நிறைய காசு பணம் இருந்தாலும், அதை பாதுகாப்பதற்கு என்று ஒரு திறமை வேண்டும் அல்லவா? அதற்கும் புதன் பகவான் தான் அருள் புரிய வேண்டும்.

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் மிகவும் வலிமையாக இருந்தால் தான், ஒருவரால் உயர்ந்த பதவியில் இருக்கும் முடியும். இந்த புதன் பகவானை எப்படித்தான் நாம் வசியப்படுத்துவது? மிக மிக சுலபமான ஒரு முறை உள்ளது. அந்த ஒரு சூட்சுமத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Astrology

பொதுவாகவே புதன் பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் என்றால் அது பச்சை நிறம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். இந்த பச்சை நிறத்தை நாம் வசியம் செய்து விட்டாலே, புதன்பகவான் நம் வசம் ஆகி விடுவார். புதன்கிழமை அன்று பச்சை நிற ஆடையை உடுத்துங்கள். தினம்தோறும் பச்சை நிற குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றி பச்சை நிறத்தில் புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டு, தீபம் ஏற்றி அந்த ஒளியில் புதன் பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

deepam

குறிப்பாக அந்த பச்சை நிற திரியில் எரியும் ஒளியில் அமர்ந்து, ஒரு  வெள்ளை நிற காகிதத்தில் பச்சை நிற பேனாவை எடுத்து உங்களுடைய பெயரை 108 முறை எழுதுங்கள். நிச்சயமாக புதன் பகவான் உங்களுக்கு அருளாசி வழங்கி விடுவார். இப்படியாக தொடர்ந்து எத்தனை நாட்கள் செய்வது? உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் வரை செய்யலாம். தவறே கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் எழுதுங்கள்.

pen

இதனால்தான் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு அந்த அரசாங்கமே பச்சை நிற பேனாவைக் கொடுத்து இருக்குமோ என்னமோ? தெரியவில்லை, ஆனால் பச்சை நிறத்திற்கும் யோகமான அதிர்ஷ்டமான வாழ்விற்கும் நிச்சயமாக தொடர்பு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.