உங்கள் கைக்கு வந்து சேரும் வருமானத்தை வீண் செலவு செய்யாமல், பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்ற வித்தையை கற்றுக் கொள்ள, இதை மட்டும் செஞ்சு பாருங்க!

நாம் நன்றாக சம்பாதித்து பணத்தை சேமித்து வைத்து விரைவாக முன்னேற வேண்டும் என்றால், கடின உழைப்போடு சேர்ந்த புத்திசாலித்தனமும், திறமையும், சேர்ந்த ஜாதக கட்ட அமைப்புகளும்  சரியாக இருக்க வேண்டும். காலமும் நேரமும், சூழ்நிலையும், நமக்கு கைகொடுக்கும் போது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும். நாம் முட்டாளாக இருந்தோமேயானால், வாழ்வில் முன்னேற்றம் ஏது? புத்திசாலித் தனத்தையும், விழிப்புணர்வையும் நமக்குல் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், என்ன செய்வது? நம் தலையெழுத்தை மாற்ற, ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த பரிகாரம் ஒன்று உள்ளது. அது என்ன பரிகாரம்? பரிகாரத்தை எப்படி செய்யலாம்? என்பது பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் புதன் பகவான் வலிமையாக இருந்தால், அவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள். அதாவது, ஒரு வேலையை சட்டென்று செய்து முடித்துவிட்டு, அதில் வெற்றி காணும் அளவிற்கு அவர்களுக்கு இயற்கையாகவே திறமை இருக்கும். புதன், வலிமை இல்லாமல் இருந்தால் கட்டாயம் வெற்றி காண முடியாது. தோல்வி வந்துவிட்டால், சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. சுறுசுறுப்பாக செயல்பட வில்லை என்றால் பண கஷ்டம் வரும். அப்படியே அவர்களைத் தேடி பணம் வந்தாலும் கூட, அதை திறமையாக எப்படி இரட்டிப்பாக்குவது என்ற யோசனை அவர்களுக்கு இருக்காது.

புதனுக்கு உரிய நிறம் என்றால் அது பச்சை நிறம். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பச்சை நிற ஆடையை அதிகமாக பயன்படுத்தி வர வேண்டும். பச்சை பயிறை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். முடிந்த வரை பச்சை பயிறை தானமாக கொடுப்பது நல்ல பலனையும் கொடுக்கும். இவை அனைத்தும் பொதுப்படையான பரிகாரங்களாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய புத்திக் கூர்மையை அதிகரித்துக் கொள்ள, எல்லா வேலைகளையும் தந்திரமாக, சுலபமாக முடித்துக்கொள்ள, உங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள மேற் குறிப்பிட்ட இந்த பரிகாரத்தோடு, சேர்த்து பின்வரும் பரிகாரத்தையும் செய்து பாருங்கள்.

budhan

சிறிய, சதுர வடிவிலான பச்சை துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் போல பச்சை பயிரை வைத்து, முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். பச்சை நிற நூலால் முடிச்சு போட்டுக்கொண்டால், மேலும் சிறப்பு. நீங்கள் தயார் செய்த இந்த முடிச்சை தூங்கச் செல்லும் போது உங்களது தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த பச்சை பயிறை, கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, அந்தத் துணியை துவைத்து மீண்டும் மறுநாள் தூங்கச் செல்லும் போது பச்சை பயறை வைத்து முடிச்சு போட்டு தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

இவ்வாறாக, இந்த பரிகாரத்தை 11 நாட்கள் தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய புத்திக் கூர்மையும், அறிவுத்திறனும், தந்திரமும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் மேலும் மேலும் முன்னேற்றம் அடையும். உங்கள் கைக்கு வரக்கூடிய வருமானத்தை அனாவசியமாக செலவு செய்யாமல், அதை எப்படி இரட்டிப்பாக்குவது என்ற திறமை உங்களுக்குள் தானாகவே வளர்ந்திருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.

money

தோல்வி இல்லாமல், தோல்வியை ஏற்பட்டாலும் துவண்டு போகாமல், உங்களுடைய வாழ்க்கை பாதையை முன்னேற்றத்தில் கொண்டு செல்வீர்கள். இந்தப் பரிகாரத்தை 11 நாட்கள் செய்து பார்த்து உங்களுக்கு, உங்களுடைய நடவடிக்கையில் முன்னேற்றம் தெரிந்தால் வித்தியாசங்கள் தெரிந்தால் பரிகாரத்தை அப்படியே விட்டுவிடாமல் தொடர்ந்து செய்து வரலாம். நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இது ஒரு சிறந்த பரிகாரம். புதன் பகவானின் அனுக்கிரகம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.