- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு அமைய தீப வழிபாடு

சொந்த வீடு அமைய தீப வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். ஒரு சிலருக்கு பல கனவுகள் கூட இருக்கலாம். அப்படி பல கனவுகளுடன் இருப்பவர்களில் கண்டிப்பான முறையில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற கனவும் இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்றும் சொந்த வீட்டில் இருப்பவர்கள் மற்றொரு வீடு கட்டி அதை வாடகைக்கு விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்த வீடு அமைய தீப வழிபாடு

சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த முருகப்பெருமானையே படைத்த சிவபெருமானை எந்த நாளில் எப்படி வழிபட்டால் நம்முடைய சொந்த வீடு கனவு நினைவாகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வாஸ்து நாள் என்று ஒரு நாள் வரும் அந்த நாளில் பொதுவாக வீட்டு வேலை தொடங்குவதோ, நிலை வாசல் வைப்பதோ, பூமி பூஜை செய்வதோ, கிணற்றுக்கு பூஜை செய்வது, போர் போடுவது போன்ற பல காரியங்களை செய்வார்கள். அப்படிப்பட்ட நாளை தான் நாமும் வழிபாட்டிற்கு தேர்ந்தெடுக்க போகிறோம்.

வாஸ்து நாளில் வாஸ்து நேரம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் காலண்டரில் இருக்கும். அந்த நேரத்தில் நம்முடைய வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சிவலிங்கத்திற்கு மட்டும் அல்லாமல் நந்தி பகவானுக்கும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். சிவலிங்கம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படம் இருந்தாலும் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு அவர்களுக்கு முன்பாக பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இப்படி கோலம் போட்டு முடித்த பிறகு அந்தக் கோலத்தின் நான்கு திசை களிலும் நான்கு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் நான்கு திசைகளை நோக்கி எறிவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் துணை தீபமாக ஒரு தீபத்தை தனியாக சுவாமி படங்களுக்கு முன்பாக ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தீபமானது வாஸ்து நேரம் முடியும் வரை எரிய வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வாஸ்து நாளில் வாஸ்து நேரத்தில் சிவபெருமானுக்கு நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் விரைவிலேயே நாம் சொந்த வீட்டில் குடியேறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை வந்து சேரும். முயற்சி செய்பவர்களுக்கு அந்த முயற்சிக்குரிய பலன் விரைவிலேயே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆடி கிருத்திகை தீப வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன்பு செய்து வருபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வகையில் சொந்த வீட்டில் வாழ்வதற்குரிய யோகம் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்