தற்போது உள்ள அணியின் மிகச்சிறந்த வீரர் கோலி, தோனி என யாரும் இல்லை. இவர்தான் டாப் – ஆகாஷ் சோப்ரா ட்வீட்

Aakash
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்று கிழமை துவங்கியது. அன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 126 ரங்கள் மட்டுமே அடித்தது. இதனை சற்று சிரமத்துடன் சேசிங் செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி.

Toss

இதற்கடுத்து தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி நாளைக்கு (27-02-2019) பெங்களுருவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் முதல் முறையாக டி20 தொடரை இந்தியாவில் இழக்கும் நிலை ஏற்படும். இப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் : இந்திய அணியில் கோலி பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாய் இருப்பதை போல, பவுலிங்க்கு பும்ரா சிறந்த வீரராக திகழ்கிறார். என்னை பொறுத்தவரை தற்போது உள்ள சூழலில் கேப்டன் கோலியை விட பும்ராவே சிறந்த வீரர் என்று நான் கூறுவேன் என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இவரின் இந்த ட்வீட் ரசிகர்களின் மத்தியில் அதிகம் விமர்சிக்கப்படும், பகிரப்படும் வருகிறது. எது எப்படியோ நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பம்.

இதையும் படிக்கலாமே :

தோல்விக்கு தோனியே காரணம். மறைமுகமாக சாடும் – பும்ரா மற்றும் கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -